டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த தடபுடல் விருந்து.. மோடி மட்டும் அப்செட்

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணி கட்சிகளுடனான விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அப்செட்- வீடியோ

    டெல்லி: அனாவசியமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றன என்று, கூட்டணி கட்சிகளுடனான விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், வியாழக்கிழமையான, நாளை வெளியாக உள்ள நிலையில், புதன்கிழமை இரவு டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்தளித்தார்.

    இந்த விருந்து மாலை 7.15 மணிக்கு துவங்கி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    ராவணனை போல அகங்காரம்.. கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரம் கொண்டவர் மம்தா.. கிரிராஜ் சிங் தாக்கு ராவணனை போல அகங்காரம்.. கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரம் கொண்டவர் மம்தா.. கிரிராஜ் சிங் தாக்கு

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    இதில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 39 கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    டின்னர் நிகழ்ச்சி

    டின்னர் நிகழ்ச்சி

    எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகத்தை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நரேந்திர மோடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மோடி ஆதங்கம்

    மோடி ஆதங்கம்

    தோல்வி உறுதியாகிவிட்டதை, எக்ஸிட் போல் மூலமாக அறிந்து கொண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துவதற்கு தான் எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மோடி தனது அப்செட்டை வெளிப்படுத்தியதாக, செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கைவிடுத்தது. தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். எனவே விருந்து நிகழ்ச்சியில், பிரதமர் அப்செட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.

    English summary
    PM Narendra Modi upset with opposition parties for Controversy Over EVMs and he express at NDA Dinner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X