டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனாவிலிருந்து மீள்வோம்.. ஜி20 உச்சி மாநாட்டில் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டின் 15வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்றார்.

கொரோனா வைரஸ் நோயின் உலகளாவிய தாக்கம் குறித்து விவாதிக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரும் இதில் பங்கேற்ற முக்கிய தலைவர்களாகும்.

Coordinated Efforts Will Lead To Fast Recovery From Pandemic, says PM at G20

இரண்டு நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் தொடக்க உரையாற்றினார். கோவிட் -19 தடுப்பு மருந்தை குறைந்த விலையில், அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது குறித்து அவர் பேசினார்.

அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கைஅமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கை

இக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

"ஜி 20 தலைவர்களுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் இந்த ஒருங்கிணைந்த முயற்சி நிச்சயமாக இந்த தொற்றுநோயிலிருந்து விரைவாக மீட்க வழிவகுக்கும். இந்த உச்சி மாநாட்டை நடத்திய சவுதி அரேபியாவுக்கு நன்றி"

"ஜி 20ன் திறமையான செயல்பாட்டிற்கான டிஜிட்டல் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வலிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். வெளிப்படைத்தன்மை நமது சமூகங்களை நெருக்கடியுடன் கூட்டாகவும் நம்பிக்கையுடனும் போராட ஊக்குவிக்க உதவுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi on Saturday attended the 15th edition of the G20 Summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X