டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித்தனர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித்தனர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார் - வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு பேரணியில் இன்று பங்கேற்றபோது ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள், ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிருபர்களிடம் பேசிய சுகாதார மையத்தில் வசிக்கும் மருத்துவர்கள், கூறுகையிில், சில காயங்கள் மிகவும் கடுமையானவை, இதனால் மாணவர்களை அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டியுள்ளது.
    10க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களுக்கு பிறப்புறுப்பில் தாக்குதல் காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் காயங்களைக் கண்டறிந்துள்ளோம், மேலும் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். காயங்கள் தீவிரமாக இருப்பதால் நாங்கள் அவர்களை அல் ஷிஃபாவுக்கு மாற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Cops hit us in our private parts, says Jamia students

    "சில மாணவர்களுக்கு லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன" என்று அவர்கள் கூறினர்.

    இரண்டு ஆண் மாணவர்கள், நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், காவல்துறையினரால் எங்கள் பிறப்புறுப்பு பகுதி தாக்கப்பட்டது என குற்றம்சாட்டினர்.

    சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாணவி, கூறுகையில், ஒரு பெண் போலீஸ்காரர் தனது பர்தாவை அகற்றி, லத்தியால் பிறப்புறுப்பு பகுதிகளில் தாக்கியதாக கூறினார்.

    "நான் எனது பிறப்புறுப்பு உள்ளிட்ட வெளியில் சொல்ல முடியாத உடல் பாகங்களில் போலீசாரால் பூட்ஸால் தாக்கப்பட்டேன். ஒரு பெண் போலீஸ்காரர் என் புர்காவை கழற்றி என் பிறப்புறுப்பில் லத்தியால் தாக்கினார்," என்று அவர் அழுதபடி கூறினார்.

    நடக்கும் சம்பவங்களை வீடியோவாக பிடிக்க முடியாதபடி தடுக்கும் வகையில், போலீசார் எங்களை, பெல்ட்டுக்குக் கீழே அடித்தனர் என்று மற்றொரு மாணவர் கூறினார்.

    "போலீசார் எங்களை பிடித்து தள்ளினர், நாங்கள் நான்கு அல்லது ஐந்து முறை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம்" என்று ஒரு மாணவி கூறினார்.

    ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் சிஏஏ சட்டத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Students narrative of today's casualty during the anti CAA March to Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X