டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- இந்திய ராணுவம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    India- China அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

    லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

     இதுதான் சரியான வழி.. சீனாவிற்கு தக்க பாடம் புகட்டுவது எப்படி.. ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தல் ஐடியா! இதுதான் சரியான வழி.. சீனாவிற்கு தக்க பாடம் புகட்டுவது எப்படி.. ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தல் ஐடியா!

    இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை

    இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை

    இதனால் இந்தியா- சீனா இடையே யுத்தம் ஏற்படும் அபாயமும் உருவானது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா- ரஷ்யா- இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறுகிறது.

    எல்லையில் பேச்சுவார்த்தை

    எல்லையில் பேச்சுவார்த்தை

    லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. சீனா பகுதியில் உள்ள மோல்டா பாயிண்ட்டில் இந்த பேச்சுவார்த்தை பல மணிநேரங்கள் நடைபெற்றது. திங்களிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது.

    சுமூகமான பேச்சுவார்த்தை

    சுமூகமான பேச்சுவார்த்தை

    இப்பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ராணுவம் தெரிவிக்கையில், ஆக்கப்பூர்வமாகவும் சுமூகமாகவும் நடைபெற்றது. மோதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள சுமூக உடன்பாடு எடப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

    சர்ச்சை பகுதிகளில் படைகள் விலக்கல்?

    சர்ச்சை பகுதிகளில் படைகள் விலக்கல்?

    மேலும் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து ராணுவத்தை முழுமையாக விலக்குவது தொடர்பாக இருதரப்பும் விவாதிக்கிறது. அங்கு இந்தோ-திபெத் போலீசை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று லடாக் பகுதியை பார்வையிட ராணுவ தளபதி நரவனே பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian Army said that Corps Commander level talks between India-China were held at Moldo in cordial,positive and constructive atmosphere.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X