அப்பாடா.. நிம்மதி அளிக்கும் மத்திய அரசின் அறிக்கை! இந்தியாவில் மீண்டும் சரிவு பாதையில் கொரோனா?
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றத்தாழ்வுகள் உடன் நீடித்து வந்த நிலையில் நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 15 ஆயிரம் பேருக்கு உறுதியான நிலையில் இன்று 11,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.
பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”
சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 19 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 15 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று கூட பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

மீண்டும் உயர்வு
நேற்று முன்தினம் சுமார் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 15 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 15 ஆயிரத்து 950 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்று 11 ஆயிரத்து 739 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக 25 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 9179 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 92 ஆயிரத்து 576 பேர் கிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 196 கோடியோ 97 லட்சத்து 95 ஆயிரத்து 794 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 910 முதல் டோஸ் தடுப்பூசியும், 91 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 334 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 550 டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.