டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.. உதவிய தன்னார்வலர்கள்.. காண்போரை கலங்க வைத்த வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பசியுடனும் பட்டினியுடனும் கடும் வெயிலில் ஊருக்கு நடந்து சென்று இருக்கிறார் . வழியில் அந்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அந்த வீடியோ காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது.

Recommended Video

    Hungry girl child asked two box for her family.

    டெல்லி போன்ற வட மாநில தலைநகரங்களில் அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் ஊரடங்கு காரணமாக சாப்பிட வழியில்லாமல், பசி, பட்டினியில் தவித்தனர்.

    Corona Lockdown: With hungry that girl child asked two box for her family

    தங்கியிருந்த தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் கைவிட்டதால் சாப்பிட வழியில்லாத மக்கள் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று பசியை, வெயிலை பொருட்படுத்தாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

    இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வைரலாகி வருகிறது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

    இது ஒருபுறமெனில் லட்சக்கணக்கான வடமாநில மக்கள் டெல்லி போன்ற நகரங்களில் குவிந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டனர். இதனால் பிரச்சனை மேலும் அதிகரித்தது. ஒருகட்டத்தில் அவர்களை அரசுகள் சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்தன.

    கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம் கொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்

    இதனிடையே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பசியுடனும், பட்டினியுடன் கடும் வெயிலில ஊருக்கு நடந்து சென்று இருக்கிறார் . வழியில் அந்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அப்போது சிறுமிக்கு உணவு அளித்த போது தம்பிக்கும் உணவு வேண்டும் என்கிறாள் அந்த சிறுமி. அதன்பின்னர் சிறுவனுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அவன் தன் அம்மாவை உணவு தருவதாக அழைக்கிறான். இப்படியாக முடியும் அந்த வீடியோ காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது.

    English summary
    Corona Lockdown: With hungry that girl child asked two box for her family. And that boy calling his mummy for got food box
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X