• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இடுப்பை கிள்ளி.. துப்பட்டாவை இழுத்து.. ஆஸ்பத்திரியில் அக்கிரமம்.. கணவனை இழந்து கதறிய மனைவி..!

|

டெல்லி: கொரோனா பாதித்த கணவனிடம், மனைவி நீரஜா பேசி கொண்டிருந்தபோது, திடீரென அவரது வயிற்றை பிடித்து கிள்ளி உள்ளார் அந்த மருத்துவமனை ஊழியர்.. இதனால் அதிர்ந்து போய் நீரஜா டக்கென திரும்பி பார்க்கையில், அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து சிரித்துள்ளர் அதே ஊழியர்.. இப்படி ஒரு அக்கப்போர் டெல்லி மருத்துவமனையில் நடந்துள்ளது..!

கொரோனா தொற்றின் இந்த 2வது அலை பயங்கரமாக இருக்கிறது.. இதனால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. ஆஸ்பத்திரிகளில் தொற்று பாதித்தோர் நிறைந்து வழிகிறார்கள்.

வயசு 66.. மொத்தம் 16 மனைவி.. டெய்லி 4 பேருடன்..17 ஆவதாக ஒரு தேடல்.. ஜிம்பாப்வேயின் ஜிலீர் தாத்தா! வயசு 66.. மொத்தம் 16 மனைவி.. டெய்லி 4 பேருடன்..17 ஆவதாக ஒரு தேடல்.. ஜிம்பாப்வேயின் ஜிலீர் தாத்தா!

போதுமான அளவுக்கு பெட் இல்லை.. ஆக்சிஜன் இல்லை.. தடுப்பூசி இல்லை.. கடைசியில் சுடுகாடும் இல்லை என்ற நிலைமையில் வடமாநிலம் தத்தளித்து வருகிறது.

 இளம்பெண்

இளம்பெண்

இதில் பீகார், உபி போன்ற மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் படுமோசமாக இருக்கிறது.. இது தொடர்பான போட்டோக்களும் செய்திகளும் நமக்கு நித்தமும் வந்தபடியே உள்ளன. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.

 காய்ச்சல்

காய்ச்சல்

டெல்லி நொய்டாவைச் சேர்ந்தவர் அந்த பெண்.. 31 வயதாகிறது.. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து பீகாருக்கு கணவருடன் வந்துள்ளார்.. வந்த இடத்தில் கணவனுக்கு திடீரென ஜூரம் வந்துள்ளது.. எனவே, கடந்த மாதம் 11-ம் தேதி கணவனை அழைத்து கொண்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.. கொரோனா டெஸ்ட் 2 முறை எடுத்து பார்த்ததில், ரிசல்ட் நெகட்டிவ் என்றுதான் வந்தது.. ஆனாலும் ஜூரம் மட்டும் நிற்கவே இல்லை.. நாளுக்கு நாள் கணவனின் உடம்பும் மோசமாகி கொண்டே வந்தது.

 தொற்று

தொற்று

இந்த சமயத்தில் அந்த பெண்ணின் அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் அவருக்கு டெஸ்ட் செய்ததில், கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து தன்னுடைய கணவருக்கும் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அம்மாவையும், பாகல்பூர் குளோசல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

 தண்ணீர்

தண்ணீர்

ஆனால், அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லையாம்.. சில சமயம் டாக்டரே இருந்தாலும், வார்டு அசிஸ்டென்ட் அடிக்கடி காணாமல் போய்விடுவாராம்.. எந்த மருத்துவ உதவி கேட்டாலும் செய்து தருவதில்லையாம்.. ஒருமுறை, அந்த கணவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கேட்டுள்ளார்.. ஆனால் ஊழியர்கள் யாரும் தண்ணீர்கூட தரவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் மனைவி.

 உதவியாளர்

உதவியாளர்

படுத்த படுக்கையாக இருந்த தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த ஆஸ்பத்திரி உதவியாளர், அந்த பெண்ணின் இடுப்பை பிடித்து கிள்ளி உள்ளார்.. பிறகு துப்பட்டாவையும் பிடித்து இழுத்து சிரித்துள்ளார்.. ஆனால், இதெல்லாம் கணவனிடமோ, தன் அம்மாவிடமோ சொல்லவில்லை.. ஏற்கனவே நோயில் பாதித்துள்ளதாலும், முதலில் அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காகவும் இந்த விஷயத்தை சொல்லாமல் அந்த பெண் மறைத்துவிட்டார்

 ஆக்சிஜன்

ஆக்சிஜன்

ஆனால், கணவரின் உடல்நிலை மேலும் மோசமானது.. வேறு எங்காவது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்லிவிட்டது.. இதனால் பதறி போன அந்த பெண், மாயாகஞ்ச் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்.. அங்கு டாக்டர்கள் அதற்கு மேல் மோசமாம்.. நோயாளிக்கு சிகிச்சை தராமல், லைட் ஆஃப் செய்துவிட்டு, இருட்டில் உட்கார்ந்து செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தார்களாம்.. அந்த டாக்டர்களிடம், தன் கணவனை காப்பாற்றும்படி பெண் கதறியும் கணவருக்கு ஆக்சிஜன் கொடுக்க மறுத்துள்ளனர்.

 பாட்னா

பாட்னா

அதனால், அங்கிருந்து பாட்னாவில் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு கணவனை அழைத்து சென்றுள்ளார் மனைவி.. அங்கே நடந்த கொடுமை அதற்கு மேல் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. கணவனுக்கு ஆக்சிஜனை வைத்துள்ளனர்.. ஆனால், கொஞ்ச நேரத்தில் ஊழியர்கள் வந்து பாதியிலேயே ஆக்சிஜனை பிடுங்கி சென்றுவிட்டார்களாம்.. அதனால் வேறு ஆக்சிஜனை வாங்கவேண்டிய நிலைமை வந்தது.. ஒரு ஆக்சிஜன் 50,000-க்கு அதே ஆஸ்பத்திரியில் விற்றார்களாம்.. அதை வாங்குவதற்கு எப்படி எப்படியோ பாடுபட்டும், கடைசியில் அந்த கணவன் பரிதாபமாக இறந்துவிட்டார்.

வீடியோ

வீடியோ

கடைசிவரை பாடுபட்டும் கணவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதால் கதறி கதறி அழுதார் அந்த பெண்.. தன் கணவனை 3 ஆஸ்பத்திரியில் சேர்த்தும், டாக்டர்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர் என்று ஒரு வீடியோ போட்டு பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.. யாருக்காவது கொரோனா வந்தால், நீங்களே சொந்தமா உங்களை கவனித்து கொள்ளுங்கள்.. யாருமே ஆஸ்பத்திரிக்கு போகாதீங்க.. ஆஸ்பத்திரியை நம்பாதீங்க.. என்று கண்ணீர் வேண்டுகோளும் இந்த பெண் வைத்துள்ளார்..!

English summary
Corona patients wife says molested at Delhi hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X