டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா போறீங்களா.. உஷார்.. மத்திய அரசு அட்வைஸ்.. பெங்களூர் இண்டிகோ விமானமும் ரத்து

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா உட்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் சிறப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய குடிமக்களுக்கு சீனா பயணம் செய்வதைத் தவிர்க்க ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது என்று, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20 வரை டெல்லியில் இருந்து சீனாவின் செங்க்டு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

பணத்தை திருப்பி கொடுங்க.. வேண்டுமென்றே இருமி கொரோனா வைரசை பரப்பிய சீன இளைஞர்.. திக் வீடியோ! பணத்தை திருப்பி கொடுங்க.. வேண்டுமென்றே இருமி கொரோனா வைரசை பரப்பிய சீன இளைஞர்.. திக் வீடியோ!

பெங்களூர்

பெங்களூர்

அதேபோல, பெங்களூரிலிருந்து ஹாங்காங் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் இந்திய விமானிகள் மற்றும் கேபின் குழுவினருக்கு N95 முகமூடிகளை அணியவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

சீனாவில் மருத்துவ மாணவராக இருந்த ஜெய்ப்பூர்வாசி ஒருவர் ஜனவரி 12 ஆம் தேதி வுஹானில் இருந்து தாயகம், திரும்பியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டார். அவரது ரத்த பரிசோதனையில், வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

சொந்த பொருட்கள்

சொந்த பொருட்கள்

தனிப்பட்ட தொடர்பைக் குறைப்பதன் மூலம் புதிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தைவானின் சீனா ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளதாம். அதாவது, பயணிகள் தங்கள் சொந்த குளிர்பான பாட்டில்களைக் கொண்டுவர ஊக்குவிப்பதாகவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை டிஸ்போசபில்ஸுடன் மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்துவதாகவும் விமான நிறுவனத்தினர் கூறினர்.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

விமான நிறுவனமும் அதன் பிராந்திய நிறுவனமான மாண்டரின் ஏர்லைன்ஸும் திங்கள்கிழமை முதல் சூடான உணவை வழங்குவதை நிறுத்திவிட்டன. மேலும், மேஜை துணி மற்றும் நாப்கின்களை காகிதங்களாக மாற்றின. விமான பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பைலட்டுகளும், பயணிகளும் மிகுந்த ஜாக்கிரதையுடன்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கையாண்டு வருகின்றனர்.

English summary
Special vigilance is also being done in India in view of the danger of corona virus spreading rapidly in the mainland of the world including China. According to the news agency ANI, the Union Health Ministry has issued advisories to Indian citizens to avoid traveling to China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X