டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1.75 வீடுகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஆன்லைன் மூலம், வீடுகளை திறந்து வைத்து பேசிய மோடி, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து பேசினார்.

Corona Virus: People should be carefull untill the vaccine comes says PM Modi

பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது.

தற்போது நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது . ஆனால் மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. விரைவில் இந்தியாவில் மீண்டும் மனித சோதனை.. சீரம் நம்பிக்கை!ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. விரைவில் இந்தியாவில் மீண்டும் மனித சோதனை.. சீரம் நம்பிக்கை!

இன்னும் கொரோனா நம்மை விட்டு நீங்கவில்லை. கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. முழுமையாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா பாதிப்பு போகாது. நாம் அதுவரை கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள் கவனமாக மாஸ்க் அணிய வேண்டும். சமுக இடைவெளி விட வேண்டும். பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும், வேக்சின் வரும் வரை மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Corona Virus: People should be carefull untill the vaccine comes says PM Modi in his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X