டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு!

இந்தியாவுக்கு 100 வெண்டிலேட்டர்களை தர அமெரிக்கா தெரிவித்துள்ளது டெல்லி: இந்தியாவுக்கு முதல்கட்டமாக 100 வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.. அடுத்தவாரம் இந்த 100 வெண்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு முதல்கட்டமாக 100 வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.. அடுத்தவாரம் இந்த 100 வெண்டிலேட்டர்களை கப்பல் மூலம் அனுப்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Recommended Video

    டிரம்புடன் பேசியது குறித்து மோடி

    5வது முறையாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. ஆனால் முழுமையாக கொரோனாவை ஒழிக்க முடியவில்லை.. தாக்கமும் நீடித்து வருகிறது.. தொற்றும் அதிகமாகி வருகிறது.. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. எனினும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை துரிதமாக்கியே வருகிறது.

     coronavirus: 100 ventilators for india, says donald trump

    இதனிடையே, இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கும் என்று கடந்த மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.. அதன்படி, தற்போது 100 வெண்டிலேட்டர்கள் இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 100 வெண்டிலேட்டர்கள் அனுப்பப்பட உள்ளன.

    நேற்று அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி போனில் பேசினார்கள் என்பதும், ஜி7 மாநாடு, கொரோனா தொற்று பரவல், உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்..

    அமெரிக்காவில் செப்டம்பரில் நடக்க உள்ள ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். "இந்தியா-அமெரிக்க ஆலோசனைகளின் செழுமையும் ஆழமும் கொரோனாவுக்கு பிந்தைய உலகளாவிய கட்டமைப்புக்கு ஒரு முக்கிய தூணாக இருக்கும் என்று பிரதமரும் தெரிவித்திருந்தார்.

    சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்கா.. எதிர்க்கும் ரஷ்யா.. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமா? சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்கா.. எதிர்க்கும் ரஷ்யா.. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமா?

    இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்கு முதற்கட்டமாக 100 வெண்டிலேட்டர்களை அமெரிக்கா அடுத்த வாரம் கப்பலில் அனுப்ப தயாராக இருக்கிறது என்பதை அறிவிப்பதில் அதிபர் டிரம்ப் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று சொன்னதை இன்று டிரம்ப் செய்து காட்டி உள்ளார்!

    English summary
    coronavirus: 100 ventilators for india, says donald trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X