டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: தெலுங்கானாவிலும் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது! டெல்லியில் 3 ஆயிரத்தை நெருங்குகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானாவிலும் கொரோனாவின் பாதிப்பு 1,000-த்தை தாண்டியுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,184. கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 872.

Coronavirus: 1002 positive cases in Telangana and Delhi nears 3000

மகாராஷ்டிராவில்தான் மிக மோசமாக கொரோனா பாதிப்பு உள்ளது. சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3301 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 151.

3-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. மொத்தம் 2918 பேர் பாதிக்கப்பட்டும் 54 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்! இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்!

ராஜஸ்தானில் 2185 பேரும் மத்திய பிரதேசத்தில் 2096 பேரும் தமிழகத்தில் 1885 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் 1868, ஆந்திராவில் 1097 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

Recommended Video

    கொரோனாவுக்கு அடுத்து மோசமான ஆபத்து... இந்தியாவுக்கு ஐ.நா. எச்சரிக்கை

    கொரோனா பாதிப்பில் 1,000-த்தை தாண்டிய 9-வது மாநிலமாக தெலுங்கானா இணைந்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 1097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை தெலுங்கானாவில் 31 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 338 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    1002 positive cases of coronavirus have been reported from Telangana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X