டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மொத்தம் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக 2152020 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 65156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 43454 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர்.

Coronavirus: 13 districts are accounting more number of deaths in India

இந்த நிலையில் 13 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் கேஸ்கள் வேகமாக அதிகரிக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி , கம்ரூப், பாட்னா, ரஞ்சி, ஆலப்புழா, கொஞ்சம், லக்னோ , 24 பர்கானாஸ் வடக்கு, ஹூக்ளி, ஹவுரா, கொல்கத்தா மற்றும் மால்டா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக கொரோனா கேஸ்கள் உள்ளது.

கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்

இங்குதான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் 9% ஆக்டிவ் கேஸ்கள் இங்குதான் உள்ளது. அதேபோல் 14% கொரோனா மரணங்கள் இங்குதான் நிகழ்ந்துள்ளது. இங்குதான் குறைவாக சோதனை செய்யப்பட்டு, அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்?இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

அதே சமயம் இந்தியாவில் ஐந்து முக்கியமான நகரங்கள் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முமபையில் 122316 கேஸ்கள் உள்ளது. புனேவில் 109988 கேஸ்கள் உள்ளது . சென்னையில் 108124 கேஸ்கள் உள்ளது. டெல்லியில் 144127 கேஸ்கள் உள்ளதஹு குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: 13 districts are accounting more deaths in India says health ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X