டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

196 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது- 50 ஆயிரத்தை நோக்கி உயிரிழப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் முதல் பாதிப்பு தொடங்கியதில் இருந்து தற்போதைய 196 நாட்களில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆகஸ்ட் 13-ந் தேதி அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,53,622.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 16,95,982. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,703. மொத்தம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,96,637.

    தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்புதமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு

    24 லட்சத்தை தாண்டியது

    24 லட்சத்தை தாண்டியது

    இதனைத் தொடர்ந்து மாநிலங்கள் வியாழக்கிழமை மாலை 24 மணிநேர பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்களை வெளியிட்டன. இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியதாகிவிட்டது. ஆந்திராவில் 24 மணிநேரத்தில் புதியதாக 9996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 82 பேர் கொரோனாவால் மரணித்து போயினர். ஆந்திராவில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 2,74,138 ஆக அதிகரித்தது.

    தமிழகத்தில் 5835

    தமிழகத்தில் 5835

    தமிழகத்தில் வியாழன்று மட்டும் 5835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5397.

    பிற மாநில பாதிப்பு நிலவரம்

    பிற மாநில பாதிப்பு நிலவரம்

    மகாராஷ்டிராவில் 11,813; கர்நாடகாவில் 6,706; டெல்லியில் 956 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உ.பியில் 4,537, மேற்கு வங்கத்தில் 2997; பீகாரில் 3,906; தெலுங்கானாவில் 1931 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வியாழன்று மாலை அறிவிக்கப்பட்டது. குஜராத்தில் 1,092 பேருக்கும் அஸ்ஸாமில் 2,796 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    50 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்

    50 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்

    இந்தியாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613; அதாவது கேரளாவில் முதலாவது கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து 196வது நாளில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 17,50,636. கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 48,144. கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,60,348 மட்டும்.

    English summary
    India's confirmed coronavirus cases crossed the 24-lakh mark on Thursday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X