டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 மணி நேரத்தில் வேகம் எடுத்த கொரோனா.. மோசமான நாள்.. இந்தியாவில் 6412 பேர் பாதிப்பு.. 199 பேர் பலி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுக்க கொரோனா காரணமாக 199 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஸ்டேஜ் 3 பரவலை நோக்கி வேகமாக சென்று வருகிறது. உள்நாட்டிற்கு உள்ளேயே கொரோனா வேகமாக பரவும் வாய்ப்புகள் நிலவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த மிக தீவிரமாக முயன்று வருகிறது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

கொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்! கொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்!

இதுவரை டெஸ்ட்

இதுவரை டெஸ்ட்

கடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.இது வரை நாடு முழுக்க மொத்தம் 1,44,910 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு இரண்டு, மூன்று முறை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1,30,792 பேருக்கு நேற்று வரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 809 பேருக்கு நாடு முழுக்க கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 225 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக மகாராஷ்டிரா தோல்வியை தழுவும் நிலைக்கு சென்று உள்ளது. அங்கு 1364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 98 பேர் பலியாகி உள்ளனர்.

நிலைமை மோசமானது

நிலைமை மோசமானது

அங்கு பலி எண்ணிக்கை 100ஐ தொடும் நிலை உள்ளது. அங்கு 1141 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகாராஷ்டிராவில் 125 பேர் குணமடைந்து உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 799 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 27 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி மோசம்

டெல்லி மோசம்

டெல்லியின் நிலை கூட இதில் மோசமாகிதான் வருகிறது. டெல்லியில் 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். டெல்லியில் 12 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.தெலுங்கானாவில் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 414 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 45 பேர் குணமடைந்து உள்ளனர். தெலுங்கானாவில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தானில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 423 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜஸ்தானில் 60 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 353 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 33 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உபியில் 375 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் நிலை

ஆந்திர பிரதேசத்தின் நிலை

ஆந்திர பிரதேசத்தில் 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 350 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் 10 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இதுவரை ஆந்திர பிரதேசத்தில்5 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 259 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 30 பேர் வீடு திரும்பி உள்ளனர். அங்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா நல்ல நிலை

கேரளா நல்ல நிலை

கேரளா கொரோனாவை வீழ்த்த தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. கேரளாவில் 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 258 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் தற்போது வரை 97 பேர் குணமடைந்து உள்ளனர்.கேராளாவில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிரான போரில் கேரளா மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறியுள்ளது.

English summary
Coronavirus: 25 deaths in single day in Maharashtra, 5868 affected in India so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X