டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த 5 மாநிலங்கள்தான் ரொம்ப டென்ஷனை கொடுக்குது.. மொத்தம் 56% நோயாளிகள்.. கவலையா இருக்கு!

5 மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலேயே தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில்தான் கொரோனாவைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது. மொத்த புதிய தொற்றாளர்களில் இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 56 சதவீதமாகும்.

நாட்டின் கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்த ஐந்து மாநிலங்கள்தான் பெரும் சுமையை சுமந்து கொண்டுள்ளன. இந்தியாவில் புதிதாக பதிவான 69,921 தொற்றாளர்களில் 56 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 819 இறப்புகளில் 65.4 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

coronavirus: 5 states account for 56% of indias new case burden

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள்தான் இவை. இங்குதான் அதிக அளவில் கொரோனாவைரஸ் பரவல் இருக்கிறது. உயிரிழப்புகளும் இங்குதான் அதிகமாக உள்ளது.

மொத்தம் உள்ள 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 கேஸ்களில் 62.2 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேசமயம், 24 மணி நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்த மாநிலங்களே முன்னணியில் உள்ளன. அந்த அளவானது 58 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாதான் பட்டியலில் டாப்பில் உள்ளன. இவற்றின் நோய்த் தொற்று எண்ணிக்கை மட்டும் 48.6 சதவீதம் ஆகும்.

மகாராஷ்டிராவில் நோயால் பாதிக்கப்பட்டோர் சதவீதம் 24.7 சதவீதமாக உள்ளது. மரணங்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாபிலும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முறையே 52, 49 ஆக அவை இருந்தன.

பெரம்பலூர் தொகுதி மாணவர்களுக்கு யோகம்... பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் பாரிவேந்தர்..!பெரம்பலூர் தொகுதி மாணவர்களுக்கு யோகம்... பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் பாரிவேந்தர்..!

டெல்லியைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4444 பேர் உயிரிழந்துள்ளனர். இது உபியை விட அதிகமாகும். உத்தர பிரதேசத்தில் 3486 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்லியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், உபியில் 63 பேர் இறந்தனர்.

இந்தியாவில் மொத்தம் உள்ள 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்களில் 60 சதவீதம் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் உள்ளன. இதில் மகாராஷ்டிராவின் பங்கு மட்டும் 21 சதவீதமாகும்.

English summary
coronavirus: 5 states account for 56% of indias new case burden
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X