டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 62 மாவட்டங்கள்.. 80% கொரோனா நோயாளிகள்.. இதுதான் 'பரவும் பேட்டர்ன்'.. மத்திய அரசு அதிரடி திட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்தம் 4289 பேருக்கு பரவி உள்ள நிலையில் கொரோனா பரவும் முறை எப்படி என்று மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்தம் 4289 பேருக்கு பரவி உள்ள நிலையில் கொரோனா பரவும் முறை எப்படி என்று மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. எந்த மாவட்டங்களில் கொரோனா அதிகமாக பரவுகிறது என்று மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது.

Recommended Video

    இதுதான் கொரோனா பரவும் பேட்டர்ன்... மத்திய அரசு அதிரடி

    மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 3,577 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 83ஐ தாண்டியுள்ளது. ஆனால் மாநில அரசுகள் கொடுத்துள்ள விவரத்தின்படி நாடு முழுக்க 4289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா காரணமாக நாடு முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் செவ்வாய் கிழமையோடு இந்த ஊரடங்கு முடிவிற்கு வருகிறது.

    முதல் சோதனையில் நெகட்டிவ்.. ஆனால் 28 நாட்களில் பாசிட்டிவ்.. குழப்பும் கொரோனா.. பீலா ராஜேஷ் விளக்கம்!முதல் சோதனையில் நெகட்டிவ்.. ஆனால் 28 நாட்களில் பாசிட்டிவ்.. குழப்பும் கொரோனா.. பீலா ராஜேஷ் விளக்கம்!

    வேகம் எடுத்த கொரோனா

    வேகம் எடுத்த கொரோனா

    கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 14க்கு பின் லாக் டவுன் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 14க்கு பின் மொத்தமாக லாக் டவுன் நீட்டிக்கப்படாது. ஆனால் சில மாவட்டங்களில் மட்டும் லாக் டவுன் நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வருகிறது. அதன்படி இந்தியாவில் உள்ள 3577 கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு இடையே ஒரு பேட்டர்ன் உள்ளது.

    முக்கியமான மாவட்டங்கள்

    முக்கியமான மாவட்டங்கள்

    இந்த நோயாளிகளில் மொத்தம் 80% பேர் 62 மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். இந்தியா முழுக்க 274 மாவட்டங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்த 62 மாவட்டங்கள்தான் அதிகமான நோயாளிகளை கொண்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 14க்கு பின்னும் லாக் டவுன் தொடர வாய்ப்புள்ளது.

    இந்த வேகம்

    இந்த வேகம்

    இந்த கொரோனா பரவல், நிலப்பரப்பை அடிப்படையாக கொண்டது. இந்த 62 மாவட்டங்கள் மீது இனி முழு கவனம் செலுத்தப்படும். மொத்தமாக இங்கு அதிகாரிகள் களமிறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். இப்படி மாவட்டம் மாவட்டமாக பிரித்து பணிகளை செய்வதன் மூலம், மொத்தமாக கொரோனா பரவலை தடுக்க முடியும். இதுதான் தற்போது மத்திய அரசின் திட்டம்.

    எண்ணிக்கை எப்படி இரட்டிப்பாகிறது

    எண்ணிக்கை எப்படி இரட்டிப்பாகிறது

    இதற்கு முன் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8 நாட்களுக்கு ஒருமுறைதான் இரட்டிப்பு ஆனது. ஆனால் தற்போது 4.1 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் இரட்டிப்பு ஆகிறது. டெல்லி மத கூட்டம் நடக்கவில்லை என்றால் இந்த எண்ணிக்கை 7.4 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பு ஆகி இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    சோதனைகள் அதிகம்

    சோதனைகள் அதிகம்

    கொரோனா டெஸ்ட் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. முதலில் ஒரு நாளுக்கு 2500 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டது. அதன்பின் 4000 பேருக்கு ஒரு நாளில் டெஸ்ட் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை 10 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. நேற்று 9800 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா சோதனைகள் தீவிரம் அடைந்துள்ளது, என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: 80% from 62 states, the Center finds a pattern among the patients in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X