டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டேஜ் 2 பரவல்.. மொத்தமாக மூடப்பட்ட டெல்லி மருத்துவமனை.. டாக்டருக்கே வந்த கொரோனா.. பரபரப்பு!

டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு டெல்லி மாநில கேன்சர் மருத்துவமனை மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு டெல்லி மாநில கேன்சர் மருத்துவமனை மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளாவிற்கு பின் டெல்லியில்தான் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இன்று மட்டும் டெல்லியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதுவரை டெல்லியில் 123 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

அங்கு 115 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

முட்டாள்களே வாயை மூடிக்கிட்டு வீட்ல இருங்க .. கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை.. குஷ்பு ஆவேசம் முட்டாள்களே வாயை மூடிக்கிட்டு வீட்ல இருங்க .. கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை.. குஷ்பு ஆவேசம்

என்ன மருத்துவர்

என்ன மருத்துவர்

இந்த நிலையில் டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில கேன்சர் மருத்துவமனை கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரின் தம்பிக்கு ஏற்கனவே கொரோனா இருந்தது குறிப்பிடத்தக்கது. சில வாரங்கள் முன்புதான் அவரின் தம்பி லண்டன் சென்று வந்தார். அதன்பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஸ்டேஜ் 2 கொரோனா

ஸ்டேஜ் 2 கொரோனா

இவரை டெல்லி மருத்துவர் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார். இதன் மூலம் அந்த மருத்துவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இது ஸ்டேஜ் 2 பரவல் ஆகும். லண்டலில் இருந்து வந்த அந்த நபர் தன்னுடைய உறவினர்கள் பலரை இப்படி நேரில் சென்று சந்தித்து இருக்கிறார். தற்போது அந்த லண்டன் ரிட்டர்ன் நேரில் சென்று சந்தித்த நபர்களை எல்லாம் போலீசார் தேடி வருகிறார்கள்.

மொத்தமாக மருத்துவமனை மூடல்

மொத்தமாக மருத்துவமனை மூடல்

தற்போது டெல்லி மாநில கேன்சர் மருத்துவமனை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுத்தம் செய்வதற்காக மொத்தமாக அது மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த நர்ஸ்கள் மூன்று பேருக்கு கொரோன அறிகுறி வந்துள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கொரோனா நோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை

கொரோனா நோயாளிகள் சிகிச்சை

கடந்த ஒரு வாரத்தில் இவர் சிகிச்சை அளித்த நபர்கள் எல்லோரையும் டெல்லி போலீசார் தேடி வருகிறார்கள். மொத்தம் 350 பேருக்கு இவர் மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களுக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஏற்கனவே 60 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: A whole cancer hospital shuts down in Delhi after a Doctor gets a positive result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X