டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. உலகில் வேறு சில நிறுவனங்களும் இதேபோல் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறது.

உலகம் முழுக்க 17 தடுப்பு மருந்துகள் இதில் முன்னிலை பெற தொடங்கி உள்ளது. இந்தியாவில் மட்டும் 30 நிறுவனங்கள் இது தொடர்பான சோதனைகள் செய்து வருகிறது.

இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!

என்ன அனுமதி

என்ன அனுமதி

இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த சைடஸ் கெடில்லா (Zydus Cadila) நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனை செய்ய மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு மனித சோதனை நிலை 1, மனித சோதனை நிலை 2 ஆகிய இரண்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செம சோதனை

செம சோதனை

கடந்த பிப்ரவரி மாதமே இவர்கள் கொரோனா சோதனைகளை தொடங்கி விட்டனர். இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு வந்த போதே இவர்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகளை செய்ய தொடங்கிவிட்டனர். ஏப்ரல் இறுதியில் ஆய்வக முதற்கட்ட சோதனைகள் வெற்றிபெற்ற நிலையில், இவர்கள் சோதனையை துரிதப்படுத்தினார்கள்.

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

இந்தநிலையில் அனைத்து விதமான ஆய்வக சோதனையும் நம்பிக்கையூட்டிய நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை இவர்களின் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த சைடஸ் கெடில்லா (Zydus Cadila) நிறுவனம் அஹமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    India’s first Covid Vaccine : இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து | Covaxin
    வேறு நிறுவனம்

    வேறு நிறுவனம்

    முன்னதாக ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

    English summary
    Coronavirus: After Covaxin, Now Zydus Cadila gets the nod for their vaccine human trail in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X