டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓவர்டோஸ்.. கொரோனாவிற்கு தரப்படும் குளோரோகுய்ன்.. சாப்பிட்டவுடன் பலியான மருத்துவர்.. அதிர்ச்சி

கொரோனாவிற்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை பயன்படுத்திய அசாம் மருத்துவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை பயன்படுத்திய அசாம் மருத்துவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

    கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 1365 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 46 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவிற்கு என்ன மருந்தை பயன்படுத்தலாம் என்று உலக நாடுகள் குழம்பி வருகிறது.

    மத்திய சுகாதாரத்துறை கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. சில பகுதிகளில் கொரோனாவிற்கு எதிராக எச்ஐவி உள்ளிட்ட மருந்துகள் கூட கொடுக்கப்பட்டு வருகிறது.

    நியுயார்க், காசர்கோடு போல மாறலாம்.. ஈரோடுதான் கவலையளிக்கிறது.. தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்! நியுயார்க், காசர்கோடு போல மாறலாம்.. ஈரோடுதான் கவலையளிக்கிறது.. தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்!

     அறிவுரை வழங்கி உள்ளனர்

    அறிவுரை வழங்கி உள்ளனர்

    மிகவும் சீரியஸாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் இந்த குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இரண்டுமே மலேரியாவிற்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும். இதற்கு முன் எபோலாவிற்கு எதிராக குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படுத்தும்.

    அசாம் மருத்துவர்

    அசாம் மருத்துவர்

    இந்த நிலையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட அசாமை சேர்ந்த மருத்துவர் நேற்று பலியாகி உள்ளார். அசாமை சேர்ந்த 44 வயது மருத்துவர் உட்பாலிஜித் பர்மன் அங்கு உலா கவுகாத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி புரிகிறார். இவர் மயக்க மருந்து நிபுணர் (anaesthetist) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் கொரோனாவிற்கு எதிராக அரசு பரிந்துரை செய்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக்கொண்டு உள்ளார்.

    கொரோனா அறிகுறி

    கொரோனா அறிகுறி

    இவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துள்ளார். மத்திய அரசு கொரோனா பாதித்தவர்கள், அதிலும் கொரோனா பாதித்து மிகவும் தீவிரமாக கஷ்டப்படும் நபர்களுக்கு மட்டும்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கொடுக்க பரிந்துரை செய்தது.

    பெரிய தவறு செய்தார்

    பெரிய தவறு செய்தார்

    அதிலும் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அதிகம் கொடுக்க கூடாது என்று பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் இந்த மருத்துவர், நேரடியாக,கொரோனா இல்லாமலே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்டு சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சக மருத்துவ நண்பர்களுக்கு போன் செய்து அது பற்றி கூறி உள்ளார்.

    பலியானார்

    பலியானார்

    என்னால் மூச்சு விட முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த மருந்து சாப்பிட்டு 1 மணி நேரத்தில் மொத்தமாக மாரடைப்பு வந்து, அந்த மருத்துவர் பலியாகி உள்ளார். இவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளது. அதையும் மீறி, இவர் மருந்து பயன்படுத்தியதே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Assam Doctor dies after taking Anti-Malarial drug for the prevention of COVID --19 today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X