டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் வந்த ஒரு நன்மை.. உலக அளவில் நாய், பூனை இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று நோயால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு நன்மையாக நாய், பூனை இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகிறது.

Recommended Video

    சார்ஸ் தொடங்கி கொரோனா வரை உருவாக காரணமாக அமைந்த சட்டம்

    மனித குலத்துக்கு பேரழிவைத் தரக் கூடிய தொற்று நோய்கள் விலங்குகளிடம் இருந்து பரவி வருகிறது. தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கொடூரமாக தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

    Coronavirus Bans Dog and Cat meat Consumption

    சீனாவின் வுகான் மாகாணத்தில் பிறப்பெடுத்த இந்த கொரோனா இப்போது 190 நாடுகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இத்தகைய ஆட்கொல்லி வைரஸ்கள் விலங்குகள் மூலம் பரவுகிறது என்பது நம்பிக்கை.

    தற்போதும் கூட சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ காரணமே அவர்களது இறைச்சி பழக்கம்தான் என விமர்சிக்கப்பட்டது. நாய்கள், பூனைகளை சீனர்கள் அதிகம் உண்பதாலேயே இந்த தொற்று நோய் பரவியது எனவும் கூறப்பட்டது. ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.

    நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல் நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்

    இந்த நிலையில்தான் சீனாவின் ஷென்ஷான் நகரம் அண்மையில் நாய், பூனை இறைச்சி விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. சீனாவில் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தடை சட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாம நமது நாட்டின் மிசோரம் மாநிலத்திலும் நாய்களை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்தியாவில் நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் தெருநாய்களே இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. இறைச்சிக்காக நாய்களை மாநிலங்கள் விட்டு மாநிலம் கடத்துகிற அட்டூழியங்களும் நடந்து வந்தன. நாகாலாந்தில் நாய்கறி இறைச்சிக்கு தடை விதிக்க பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

    தற்போது கொரோனாவின் தாக்கத்தால் பரவலாக நாய், பூனை உள்ளிட்டவைகளின் இறைச்சி உண்பது ஆரோக்கியமானது அல்ல என்கிற கருத்து நம்பிக்கைக்குரியதாக மாறி இருக்கிறது.

    English summary
    After the Coronavirus attack, Dog and Cat Consumption will face ban in India and China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X