டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியே வராதீர்கள்.. டெல்லி உட்பட நாடு முழுக்க 13 மாநிலங்களில் மொத்தமாக லாக் டவுன்.. கொரோனா ஆட்டம்!

கொரோனா வைரஸை எதிர்க்கும் பொருட்டு மொத்தமாக தலைநகர் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸை எதிர்க்கும் பொருட்டு மொத்தமாக தலைநகர் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொத்தம் 13 மாநிலங்களில் இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்

    இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 344 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மொத்தமாக மகாராஷ்டிராவில் 74 பேருக்கு கொரோனா உள்ளது. இந்தியாவில் 7 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    கேரளாவில் மொத்தம் 52 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 26 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.

    டெல்லி

    டெல்லி

    இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுக்க 75 மாவட்டங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் லாக் டவுன் செய்யப்பட உள்ளது. இந்த நிலையுள் தலைநகர் டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. டெல்லி மொத்தமாக நாளை முதல் மார்ச் 31 வரை லாக் டவுன் செய்யப்படும். அங்கு பேருந்துகள் குறைவாக இயங்கும். ஆனால் அதிலும் 25% பயணிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மெட்ரோ ரயில்கள்

    மெட்ரோ ரயில்கள்

    அமைச்சரவை கூட்டத்திற்கு பின் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அங்கு மெட்ரோ ரயில்கள் இயங்காது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. ஆட்டோ, டாக்சி, ரிக்சா எதுவும் இயங்காது. கடைகள்,மால்கள், சினிமா தியேட்டர்கள் எதுவும் செயல்படாது. மிக முக்கியமான விமான போக்குவரத்தும் டெல்லியில் மொத்தமாக நிறுத்தப்படுகிறது. அங்கு தனியார் அலுவலக பணியாளர்களும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர்

    பெங்களூர்

    அதேபோல் கர்நாடகாவில் பெங்களூரிலும் நாளை முதல் மார்ச் 31 வரை லாக் டவுன் செய்யப்படுகிறது. பெங்களூரில் பேருந்துகள் மிக குறைவான அளவில் இயங்கும். தனியார், அரசு அலுவலகங்கள் எல்லாம் மூடப்படும். முன்பு பாதியாக இருந்த லாக் டவுன் பெங்களூரில் மொத்தமாக அமலுக்கு வருகிறது. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்

    அதேபோல் இன்னொரு பக்கம் ஆந்திர பிரதேசம் தற்போது லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆந்திரப்பிரதேசம் முழுக்க லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை அங்கு கடைகள், அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. அங்கு வெள்ளை ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு நாளை 12 கிலோ, அரிசி, 1500 ரூபாய் பணம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    இந்த 75 மாவட்டங்கள் போக மொத்தமாக 13 மாநிலங்கள் லாக் டவுன் செய்யப்படுகிறது. கேரளா,ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், தெலுங்கனா, பஞ்சாப், டெல்லி, நாகலாந்து, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் லாக் டவுன் செய்யப்படுகிறது. இந்தியா ஏறத்தாழ அவசர நிலையை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: Capital Delhi, Bangalore and Telangana under lockdown against the pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X