டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் .. கிடுகிடுவென உயரும் கொரோனா கேஸ்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா கேஸ்கள் கொஞ்சம் குறைவது போல இருந்தாலும் உண்மையான பீக் இனிமேல்தான் வரும் என்று கூறப்படுகிறது.

ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம் ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம்

மே மாத இறுதியில்தான் உண்மையான உச்சத்தை கொரோனா பரவல் அடையும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்று மத்திய அரசு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் தினமும் உயர்ந்து வருவதாக, புதிய கேஸ்கள் தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்குதான் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ளது.

குறையும்

குறையும்

மாறாக ஒடிசா, அசாம், ஜம்மு காஷ்மீர், கோவா, இமாச்சல பிரதேசம், புதுச்சேரி, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. மொத்தம் 13 மாநிலங்களில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

அதிகம் உள்ளது

அதிகம் உள்ளது


6 மாவட்டங்களில் 50 ஆயிரம் -1 லட்சம் வரை ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. 17 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. 26 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 15%க்கும் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

15 மாவட்டங்கள்

15 மாவட்டங்கள்

15 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி பெங்களூர், சென்னை, எர்ணாகுளம், கொல்கத்தா, விஷாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தற்போதையை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 23,311,156 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 319,229 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

English summary
Coronavirus cases are increasing 16 states including Tamilnadu says Central Health Ministry new report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X