டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா தொற்றும்... இறப்பும்... பரிசோதனை அதிகரிப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 7 நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருக்கிறது என்றாலும், மறுபக்கம் இதன் பரவல் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த ஆகஸ்ட் 10-16 ஆம் தேதிகளில் 4.3 லட்சமாக அதாவது 5.9% சதவீதம் என்ற அளவில் தொற்று பரவி வந்தது. இதுவே ஆகஸ்ட் 3-9 ஆகிய தேதிகளில் 10.9%ஆக இருந்தது. 4.1 லட்சம் பேருக்கு இந்த தொற்று பரவி இருந்தது. இதுவே ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தொற்று 16% பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருந்தது.

Coronavirus cases in India: news cases deaths increased in the past week
de

கோவிட் 19 இந்தியா ஆர்ஜின் இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், '' 52 லட்சம் பேருக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய வாரத்தில் 43 லட்சம் பேருக்கு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய வாரத்தில் கூடுதலாக 40,000 (ஜூலை 27-ஆகஸ்ட் 2) பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. இது கடந்த வாரம் 24,000 ஆக குறைந்து இருந்தது. பரவல் குறைந்து வருகிறது. கீழே இருக்கும் விகிதாசாரங்களை பார்த்தால் புரியும்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புள்ளி விவரம்

  • ஜூலை 27 ஆகஸ்ட் 2 = 3,69.588 - 16%
  • ஆகஸ்ட் 3-9 = 4,09,730 - 10.9%
  • ஆகஸ்ட் 10-16 = 4,34,003 - 5.9%

இந்தியாவில் இறப்பு விகிதம்

  • ஜூலை 27 ஆகஸ்ட் 2 = 5,345 - 16%
  • ஆகஸ்ட் 3-9 = 6,279 - 17.5%
  • ஆகஸ்ட் 10-16 = 6,555 - 4.4%

வெளியே வந்து வானத்தை பார்த்தா.. பெரிய வட்டம்.. சென்னையில் 22 டிகிரி அதிசயம்.. வானிலை மையம் விளக்கம்வெளியே வந்து வானத்தை பார்த்தா.. பெரிய வட்டம்.. சென்னையில் 22 டிகிரி அதிசயம்.. வானிலை மையம் விளக்கம்

ஞாயிற்றுக் கிழமை

  • இந்தியாவில் புதிய தொற்று = 57,700
  • இறப்பு = 943.

நாட்டில் முதன் முறையாக ஜனவரி 30ஆம் தேதி கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருந்தது. அதில் இருந்து 200 நாட்களில் 26 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி வரை ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. ஜூலை மாதம் துவக்கத்தில் ஆறு லட்சமாக இருந்த தொற்று ஜூலை 31ஆம் தேதி, 16 லட்சமாக அதிகரித்தது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி நாட்டில் 20 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.

English summary
Coronavirus cases in India: news cases deaths increased in the past week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X