டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவுக்கு 109 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 109 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Recommended Video

    How technology helps Tamilnadu in Contact tracing method so far?

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் 12 நாட்களாக அமலில் இருந்த போதும் கொரோனா வேகமாக தாக்கி வருகிறது.

    Coronavirus cases in India rises to 4,067, death toll touches 109

    இந்தியாவில் கொரோனாவால் 83 பேர் பலியாகி இருந்தனர்; மொத்தம் 3577 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனாவால் 4,067 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்கள், இந்தியாவில் பாதிப்பு அதிகம் என்கிறது.

    நாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை நாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை

    INDIA COVID-19 TRACKER புள்ளி விவரப்படி, இந்தியாவில் மொத்தம் 4298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 118 பேர் கொரோனாவல் பலியாகி உள்ளனர் என்கிறது. இதனடிப்படையில் மகாராஷ்டிராவில் 748 பேரும் தமிழகத்தில் 571 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 45 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது INDIA COVID-19 TRACKER.

    தெலுங்கானா, குஜராத்தில் தலா 11 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 7 பேரும் மத்திய பிரதேசத்தில் 13 பேரும் தமிழகத்தில் 5 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    India today reported Coronavirus related deaths and 4067 patients across the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X