டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள லாக்டவுனை ஏப்ரல் 14-க்குப் பின்னர் மத்திய அரசு நீட்டிக்கும் என்கிற செய்தியில் உண்மை இல்லை.

Recommended Video

    Central Government says no plan of extending the lockdown after April 14

    பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை அழித்து வரும் கொரோனா, சமூகப் பரவல் மூலம் வேகமாக பரவுகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    Coronavirus: Centre says No plan of extending lockdown

    ஆனால் திடீரென அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனை எதிர்கொள்ள முடியாமல் பல லட்சம் அன்றாட கூலித் தொழிலாளர்கள் விழிபிதுங்கிப் போயிருக்கின்றனர். இதனால் பல இடங்களில் லாக்டவுனை மீறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

    இதனிடையே தற்போதைய லாக்டவுன் மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரமும் எதிர்காலமும் என்ன ஆகுமோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    ஆனால் மத்திய கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா இத்தகைய தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-க்குப் பின்னர் லாக்டவுனை நீட்டிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    English summary
    Union Cabinet Secretary Rajiv Gauba said that no plan of extending the lockdown to prevent Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X