டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாடி விட நிறைய "பண்றோம்".. அளவும் கூடிருச்சு.. ஆனால் சப்புன்னு இருக்கு.. சுவாரஸ்யமே இல்லை!

கோவிட் 19 தாக்கத்தினால் பெண்களின் செக்ஸ் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது

Google Oneindia Tamil News

டெல்லி: செக்ஸ் உறவு கூடிப் போயிருச்சு.. ஆனால் முன்னாடி மாதிரி ரசிச்சு ருசிச்சுப் பண்றதில்லை. ஒரு சலிப்பு வந்துருச்சு.. இப்படி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் ஒரு சர்வேயில்.. எல்லாம் இந்த கொரோனா லாக்டவுனால் வந்த மன விரக்திதானாம்.

கொரோனாவால் ஏற்பட்ட மன விரக்திகளின் பட்டியல் ரொம்ப பெரிதாகிக் கொண்டே பேகிறது. மன அழுத்தம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது. தேவையில்லாத பய உணர்வுகள் மறுபக்கம். உடல் ரீதியாக என்றால் பெண்களுக்குத்தான் நிறைய உபாதைகள் என்று சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிடாய் வருவதில் பலரும் சிரமத்தை சந்திக்கின்றனராம்.

இப்போது செக்ஸ் உறவு குறித்த ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் செக்ஸ் உறவு அதிகரித்துள்ளது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆரம்பத்தில் காட்டப்பட்ட ஈடுபாடும், சுவாரஸ்யமும் இப்போது படிப்படியாக குறைந்து போய் விட்டதாம்.

 ஏன் இந்த தாமதம்..? சித்த மருத்துவத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ.. முழுமையாக கையில் எடுக்கலாமே?! ஏன் இந்த தாமதம்..? சித்த மருத்துவத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ.. முழுமையாக கையில் எடுக்கலாமே?!

கர்ப்பம்

கர்ப்பம்

அதாவது எப்படின்னா, லாக்டவுனுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் கர்ப்பமாக விரும்புகிறீர்களா என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்களில் 32.7 சதவீதம் பேர் ஆம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர்களிடம் தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது வெறும் 5.1 சதவீதம் பேரே இப்போது கர்ப்பம் தரிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது செக்ஸ் உறவில் நாட்டம் குறைந்துள்ளது. அதேசமயம், உறவுகள் கூடிக் கொண்டுதான் உள்ளனவாம்.

செக்ஸ் நாட்டம்

செக்ஸ் நாட்டம்

வழக்கத்தை விட இப்போது அதிக அளவிலான உடலுறவுகள் நடைபெறுகின்றன. பெண்கள் மத்தியிலும் அதிக அளவிலான செக்ஸ் நாட்டமும் ஏற்பட்டுள்ளதாம். இருப்பினும் அதில் ஒரு விதமான சலிப்பும் ஏற்பட்டுள்ளதாம். லாக்டவுனுக்கு முன்பு எல்லாவற்றையும் ஆர்வத்துடன், ரசித்து ருசித்து செய்தோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதிக அளவில் செக்ஸ் இருந்தாலும் கூட "தரம்" குறைந்திருப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துருக்கி

துருக்கி

துருக்கியில்தான் இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். கொரோனா லாக்டவுன் சமயத்தில் பெண்களிடையே செக்ஸ் நாட்டமும், அதிகரிக்கும் உடலுறவும் என்பது குறித்த ஆய்வு இது. இதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். மொத்தம் 58 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் மூலம் வாரத்துக்கு குறைந்தது 2 அல்லது 3 முறை உடலுறவு வைத்துக் கொள்வதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுவே லாக்டவுனுக்கு முன்பு வாரம் 1 அல்லது 2 முறைதான் உறவு இருந்ததாம்.

உடலுறவு

உடலுறவு

லாக்டவுக்கு முன்பு கர்ப்பம் தரிப்பதில் 32.7 சதவீத பெண்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். ஆனால் தற்போது அது 5.1 சதவீதமாக அடியோடு குறைந்து விட்டது. இருப்பினும் கர்ப்பத் தடை முறைகளைக் கடைப்பிடிக்காமலேயே பெரும்பாலான பெண்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்களாம். லாக்டவுன் சமயத்தில் காணப்படும் இன்னொரு பிரச்சினை மாதவிடாய் வருவதில் சிரமம். முன்பு இது 12.1 சதவீதமாக இருந்தது. தற்போது அது 27.7 சதவீதமாக உள்ளது.

அச்ச உணர்வு

அச்ச உணர்வு

முன்பெல்லாம் எப்போதாவது ஈடுபட்டாலும் கூட அதை முழுமையாக அனுபவித்து செய்து முடிப்போம். ஆனால் இப்போது நிறைய நேரம் இருப்பதால் அதிக அளவில் செய்து கொள்கிறோம். இதனால் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போய் விட்டது. மெக்கானிக்கலாக அதில் ஈடுபடுகிறோம். ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கூடவே பயம், அச்ச உணர்வும் இருப்பதால் ஆர்வம் குறைந்திருக்கலாம் என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.

English summary
coronavirus: covid19 is affecting female sexuality
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X