டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செகண்ட் வேவ் பீதி.. 3 மாநிலங்களில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி அளித்த கேரளா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. அதிலும் டெல்லியில் வேகமாக உயரும் கொரோனா எண்ணிக்கை பீதியை கிளப்பி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது. 8728585 பேருக்கு நாடு முழுக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 484145 பேர் இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் 8113814 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 128709 பேர் இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

சரியான நேரத்தில் பிடனுடன் பிரதமர் மோடி பேசுவார்.. டிரம்பின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டிய இந்தியாசரியான நேரத்தில் பிடனுடன் பிரதமர் மோடி பேசுவார்.. டிரம்பின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டிய இந்தியா

செகண்ட் வேவ்

செகண்ட் வேவ்

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா செகண்ட் வேவ் தொடங்கி உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் தினசரி கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பின்லாந்து போன்ற நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொடங்கி உள்ளதால் அங்கு மீண்டும் லாக்டவுன் போடப்பட்டது.

நிலை என்ன

நிலை என்ன

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. அதிலும் டெல்லியில் வேகமாக உயரும் கொரோனா எண்ணிக்கை பீதியை கிளப்பி உள்ளது. டெல்லியில் குறைந்து இருந்த தினசரி கேஸ்கள் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது மீண்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது.

மரணம்

மரணம்

அதேபோல் தினசரி மரணமும் அதிகரித்துள்ளது. நேற்று டெல்லியில் 7,053 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 104 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து ஒரே நாளில் டெல்லியில் பதிவான அதிக மரணம் இதுதான். இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு 467028 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மரணம்

டெல்லி மரணம்

டெல்லியில் பலி எண்ணிக்கை 7332 ஆக உயர்ந்துள்ளது. அங்கு டிசம்பர் மாதம் தினசரி கேஸ்கள் 15 ஆயிரத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் நாட்களில் காற்று மாசுபாடு, புகை அதிகம் இருக்கும் என்பதால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி போலவே கேரளாவிலும் மீண்டும் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

கேரளா எப்படி

கேரளா எப்படி

கேரளாவிலும் தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் 5 ஆயிரத்தை தினமும் தாண்டுகிறது. நேற்று கேரளாவில் 5537 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. அதேபோல் நேற்று 25 பேர் மரணம் அடைந்தனர். கேரளாவில் இதனால் மொத்த கேஸ்கள் 508257 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1797 ஆக உள்ளது.

பாசிட்டிவ்

பாசிட்டிவ்

கேரளாவில் தற்போது பாசிட்டிவ் ரேட் சதவிகிதம் 9.68 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கேரளாவிலும் இரண்டாம் அலை வருகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் தினசரி கேஸ்களை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று 3856 கேஸ்கள் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக எத்தனை

மொத்தமாக எத்தனை

மொத்தமாக மேற்கு வங்கத்தில் 420840 கேஸ்கள் இதுவரை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று 54 பேர் அங்கு மரணம் அடைந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7506 ஆக உயர்ந்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பது இரண்டாம் அலைக்கான அறிகுறியாக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

English summary
Coronavirus: Daily cases increases in Kerala, Delhi and WB increases the concern on Second Wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X