டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விதிமுறை மீறி மத நிகழ்ச்சி.. கொரோனா பரவ காரணம்.. டெல்லி மதபோதகர் மீது பல பிரிவுகளில் பாய்ந்த வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபைக்கு தலைமை தாங்கிய மத போதகர் மற்றும் பலர் மீது அரசு உத்தரவுகளை மீறியதற்காகவும், பலரை கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியதற்காகவும் பல பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    1897 மற்றும் தொற்று நோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Coronavirus: Delhi Tablighi Jamaat preacher booked for violating govt guidelines

    தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் பிரிவு 269 (நோய் தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்), 270 (தீங்கு விளைவிக்கும் செயல் பரவ வாய்ப்பு) பிரிவு 3 (நோய் தொற்று தண்டனை), 271 (தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமை) மற்றும் ஐபிசியின் 120 பி (குற்றவியல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பாய்ந்துள்ளன.

    தெற்கு டெல்லியில் உள்ள உள்ள மார்கஸ் (மையம்) மார்ச் 1 முதல் 15 வரை தப்லீ-இ-ஜமாஅத்தை ஏற்பாடு செய்ததுடன், வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் உட்பட குறைந்தது 2,000 பேர் கலந்து கொண்டனர்.

     டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்பு.. பலருக்கும் கொரோனா.. நிஜாமுதீனில் தனிமைப்படுத்தப்படும் மக்கள் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்பு.. பலருக்கும் கொரோனா.. நிஜாமுதீனில் தனிமைப்படுத்தப்படும் மக்கள்

    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்கஸ் மையத்தில் வசிப்பவர்கள் பலருக்கு கோவிட் -19 அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.
    தகவல் அறிந்ததும் போலீஸ் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் அந்தப் பகுதியை சீல் வைத்தனர்.

    டெல்லியில், இந்த நிகழ்வில் பங்கேற்ற குறைந்தது 24 பேர் கோவிட் -19 பாதிக்ப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று வெளியான தகவல்படி, தமிழகத்தில் மட்டும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    டெல்லி சபையில் கலந்து கொண்ட தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த, 6 பேர் கொரோனா வைரஸால் இறந்ததை தெலுங்கானா அரசு உறுதிப்படுத்தியது.

    விசா விதிமுறைகளை மீறியதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 300 வெளிநாட்டினரை இந்தியா தடுப்புப்பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், தடையுத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக, மதபோதகர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து டெல்லி காவல்துறை இன்று மாலை, வழக்குப் பதிவு செய்துள்ளது.

    English summary
    A case has been registered against the preacher who led the Tablighi Jamaat congregation in Delhi and others for violating government orders and exposing many to the threat of coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X