டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்கும் பண்டிகைகள்.. சுற்றுலா, ஷாப்பிங் செல்வதை தவிர்க்கவும்.. மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Google Oneindia Tamil News

டெல்லி: தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர உள்ள காரணத்தால் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 16,071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 34,174,843 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. அதன்பின் மாநில அந்தஸ்து.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. அதன்பின் மாநில அந்தஸ்து.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் நேற்று புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடைகள், ஹோட்டல்களை திறக்கும் நேர கட்டுப்பாட்டு நீக்கப்பட்டது. நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில்தான் பல்வேறு பண்டிகைகள் வர உள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர உள்ளதாலும், சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுவிட்டதாலும் மக்களுக்கு மத்திய அரசு முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

அறிவுரை

அறிவுரை

மக்கள் பலர் வெளியே செல்வது கொரோனா பரவலை அதிகரித்துவிட கூடாது என்பதால் அரசு இந்த அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படி மக்கள் தேவையின்றி வெளியே ஷாப்பிங் செய்வதற்காக செல்ல கூடாது. இதற்கு பதிலாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டும். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போதும், பண்டிகைகளை கொண்டாடும் போதும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

பெரிய கூட்டங்களை நடத்த கூடாது. பண்டிகை நாட்களை முன்னிட்டு பெரிய விழாக்கள், கூட்டமான பண்டிகை கொண்டாட்டங்களை மேற்கொள்ள கூடாது. முக்கியமாக 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பாசிட்டிவ் ரேட் கொண்ட மாவட்டங்களில் இந்த கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

கூட்டங்கள்

கூட்டங்கள்

ஏற்கனவே அனுமதியோடு நடக்கும் கூட்டங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். அதேபோல் மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கண்காணிக்க வேண்டும். டெஸ்டிங், டிராக்கிங், சிகிச்சை, வேக்சின், கொரோனா தடுப்பு விதிமுறை ஆகிய 5 விதிகளை மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டில் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிப்பதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறை, பொது அமைப்புகள், குழுக்கள் உதவியுடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

English summary
Coronavirus: Don't go out for shopping and traveling tells Union Govt to people ahead of Festivals like Deepavali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X