டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதாரம் போகட்டும்.. எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!

இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

இந்தியா தற்போது கொரோனாவிற்கு தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு செய்ய போகும் நடவடிக்கைகள் குறித்து மோடி பேசினார்.

மோடி என்ன சொன்னார்

மோடி என்ன சொன்னார்

பிரதமர் மோடி தனது பேச்சில்,மக்கள் ஊரடங்கில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றீர்கள், ஒவ்வொரு இந்தியனாலும் அது வெற்றி பெற்றது.சமூக விலகலே கொரோனாவை விரட்டி அடிப்பதற்கான ஒரே வழி, அதைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு வழிகளும் இல்லை. மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

இதனால் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் முக்கியம். இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடையலாம்.

பொருளாதாரம் பாதிக்கும்

பொருளாதாரம் பாதிக்கும்

இதனால் பலர் பொருளாதார சரிவை சந்திக்கலாம். ஆனால் பரவாயில்லை, எனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம்.அடுத்த 21 நாட்களை கடினமாக இருக்கும். உங்கள் குடும்பத்திற்கு 21 நாட்கள் மிக மோசமாக இருக்க போகிறது. இந்த 21 நாட்களை நாம் சரியாக பின்பற்றவில்லை என்றால், நாம் 21 வருடங்கள் பின் செல்ல நேரிடும்.

கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்

கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்

ஒவ்வொரு கிராமத்திலும் ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்த வேண்டும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருநபரும் கொரோனாவை சுமந்து வருபவராக இருக்கலாம்.ஒருவருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு பல நூறு பேருக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: Economy will go down, people life is important says PM Modi on full lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X