டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான் செய்த வேலை.. தென் கொரியாவில் கொரோனா பரவ காரணமான 'ஏஞ்சல்'.. 5000 பேர் சிக்கிய கதை!

Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதற்கு அந்நாட்டை சேர்ந்த லீ மேன் ஹீ என்ற நபர் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார். தென் கொரியாவில் இந்த வைரஸ் பரவிய கதையே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மக்களை பொறுத்தவரை அவர் இன்னொரு தூதுவர். கடவுள் அனுப்பிய ஏஞ்சல். மக்களை நல்லவழியில் கொண்டு செல்வதற்காக இயேசு அனுப்பிய நபர். அதே போல் பல்வேறு ரகசியங்கள் தெரிந்த மக்களையே குணப்படுத்த கூடிய சக்தி கொண்ட புனிதமான நபர்.

அவர் எழுந்து நின்றால் அவரின் பின்னால் வர பல லட்சம் பேர் இருக்கிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு தென் கொரியாவில் மட்டும் 2.5 லட்சம் பின்தொடர்பாளார்கள் இருக்கிறார்கள்.

என்ன அமைப்பு

என்ன அமைப்பு

தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும். இந்த ஷின்சேன்ஜி குழு என்பது லீ மேன் ஹீ என்ற நபரால் உருவாக்கப்பட்டது. இவருக்கு 88 வயதாகிறது. இவர் உருவாக்கிய இந்த ஷின்சேன்ஜி மதம்தான் தென் கொரியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் ஆகும். இந்த மதத்தின்படி கிறிஸ்துவ வழிபாட்டு முறையில் சில மாற்றங்களை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

 மிக தீவிரம்

மிக தீவிரம்

இந்த மதத்தை பின்பற்றும் மக்கள் மிக தீவிரமான கொள்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவ மதத்தில் அடிப்படையான சில விஷயங்களை மாற்றி, பைபிளில் முக்கிய திருத்தங்களை செய்து இவர்கள் வழிபாடு நடத்துகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் நடத்திய வழிபாட்டு கூட்டம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷின்சேன்ஜி குழு சார்பாக வழிபாட்டு கூட்டம் கடந்த மாதம் நடந்தது.

 எத்தனை பேர்

எத்தனை பேர்

இதில் 9000 பேர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் 9000 பேர் ஒன்றாக வழிபாடு செய்தனர். இதில்தான் பல பேருக்கு தற்போது கொரோனா தாக்கி இருக்கிறது. ஷின்சேன்ஜி கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த குழுவில் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு அருகே பலர் இருந்து ஒன்றாக வழிபாடு நடத்தி உள்ளனர். அதன்மூலம் வைரஸ் வேகமாக பரவி உள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த வைரஸ் அந்த குழுவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய 60% பேருக்கு பரவி இருக்கிறது. கிட்டத்தட்ட 4500 பேருக்கு இந்த குழுவில் வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் இந்த குழுவினரிடம் தென் கொரியா போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.சீனாவிற்கு வெளியே தென்கொரியாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே இந்த வைரஸ் அதிகம் தாக்கிய இரண்டாவது நாடு என்ற பெயரை தென் கொரியா பெற்று இருக்கிறது.

Recommended Video

    கொரோனவை சீனா உருவாக்கியதா ? உண்மை என்ன?
    என்ன ஆதரவு

    என்ன ஆதரவு

    ஆனால் இந்த குழுவின் தலைவருக்கு அவரின் பின் தொடர்பாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கள் மூலம் வைரஸ் பரவவில்லை. இது அரசு செய்த தவறு. எங்கள் கூட்டத்திற்கு வராத மக்களுக்கு வைரஸ் பரவி இருக்கிறது. அதற்கு அரசு விளக்கம் கொடுக்கவில்லை. எதோ எங்களால் மட்டும்தான் வைரஸ் பரவியது போல தவறாக சித்தரிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    இரண்டே வாரத்தில் இந்த வைரஸ் 15 மடங்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று மட்டும் அங்கு 400 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. மொத்தமாக தென் கொரியாவில் 5200 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸ் பரவும் வேகத்தை பார்த்தால் சீனாவை விட வேகமாக இந்த வைரஸ் தென் கொரியாவை பாதிக்கும் என்று கூறுகிறார்கள். சீனாவை விட இந்த வைரஸ் தென் கொரியாவில் பலரை பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    ராணுவ வீரர்கள்

    ராணுவ வீரர்கள்

    தென் கொரியாவின் ராணுவ வீரர்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. மொத்தம் 11 ராணுவ வீரர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மற்ற ராணுவ வீரர்களுக்கும் இது பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் சாத்தான் செய்த சதி, நம் மதம் வளர கூடாது என்று சாத்தான் இப்படி செய்துள்ளது என்று ஷின்சேன்ஜி மத கூட்டத்தின் தலைவர் லீ மேன் ஹீ தெரிவித்துள்ளார்.

    என்ன ஏஞ்சல்

    என்ன ஏஞ்சல்

    அதே சமயம் நீங்கள்தான் கிரிமினல் என்று லீ மேன் ஹீ மீது அந்நாட்டு அரசு கடுமையான புகார்களை வைத்துள்ளது. உங்களை மக்கள் ஏஞ்சல் என்று நினைத்தார்கள் . ஆனால் நீங்களே வைரஸ் பரவ காரணமாகிவிட்டீர்கள் என்று அரசு கூறியுள்ளது. இவரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Evil is the reason, He says, You're the reason South Korea says for COVID - 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X