டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை எதிர்கொள்ள திட்டம்.. 5 டிரில்லியன் டாலர் ஒதுக்க முடிவு.. ஜி20 ஆலோசனையில் அதிரடி!

இன்று நடந்த ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் ஜி20 நாடுகள் எல்லாம் ஒன்றாக கூட்டணி அமைத்து கொரோனாவை எதிர்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நடந்த ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் ஜி20 நாடுகள் எல்லாம் ஒன்றாக கூட்டணி அமைத்து கொரோனாவை எதிர்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 டிரில்லியன் டாலர் நிதியை ஜி20 நாடுகள் சேர்ந்து ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது

கொரோனா வைரஸ் மூலம் சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க 150க்கும் அதிகமான நாடுகள் பாதித்து இருக்கிறது. கொரோனா காரணமாக அதிகமாக ஜி20 நாடுகள்தான் பாதித்து உள்ளது. உலகின் 85% பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் இந்த நாடுகள்தான் கொரோனா காரணமாக அதிகமாக பாதித்துள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளது.

ஆலோசனை செய்தது

ஆலோசனை செய்தது

இந்த நிலையில் ஜி20 நாடுகள் எல்லாமும் ஒன்றாக சேர்ந்து கொரோனா குறித்து இன்று அவசர ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியா சார்பாக பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த ஆலோசனையில் முடிவில் ஜி20 நாடுகள் எல்லாம் ஒன்றாக கூட்டணி அமைத்து கொரோனாவை எதிர்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 டிரில்லியன் டாலர் நிதியை ஜி20 நாடுகள் சேர்ந்து ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டம், வழிமுறை, அறிவியல் உதவி, பண உதவி, அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று ஜி20 சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பெரிய சவால்

பெரிய சவால்

கொரோனா மருத்துவ ரீதியான சவாலாக எப்படி இருக்கிறதோ, அதேபோல் பொருளாதார ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பலரின் வேலை பறிபோகும். இதை தடுக்கும் வகையிலும், மீண்டும் பொருளாதார ரீதியாக பழைய நிலைக்கும் திரும்பும் வகையிலும் திட்டங்களையே வகுக்க இதில் முடிவு எடுக்கப்பட்டது. உலக ரீதியாகவும், நாடுகளுக்கு உள்ளேயும் கொரோனாவிற்கு எதிராக திட்டமிடலை வகுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மோடி பேச்சு

மோடி பேச்சு

பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் உலக நாட்டுகள் சேர்ந்து இந்த கொரோனவை எதிர்கொள்ள வேண்டும். உலக சுகாதார மையத்தில் வரும் காலங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் உலக சுகாதார மையம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக உலக நாடுகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: G20 Countries decided to inject 5 trillion dollars to tackle the pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X