டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Coronavirus: வாய் கொப்பளித்து துப்பும் தண்ணீரையும் சோதிக்கலாம்.. புதிய ஆய்வு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆன்டிஜென் டெஸ்ட்டுக்கு மாற்றாக வாய் கொப்பளித்து கிடைக்கும் திரவத்தைக் கொண்டும் பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பை அறியலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Recommended Video

    4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி

    இந்தியாவில் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய தொண்டையில் அல்லது மூக்கில் இருந்து சளி எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்டிஜென் பரிசோதனை என்று கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக தற்போது வாய் கொப்பளித்து கிடைக்கும் திரவத்தை பரிசோதனை செய்தாலும் எளிதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு பரிசோதனைகளும் எளிய முறையில், குறைந்த செலவில் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    Coronavirus: Gargle water test instead of Swab test recommended by Indian medical council of india

    இதுகுறித்த ஆய்வை 50 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஸ்வேப் முறையில் செய்யும்போது ஏற்படும் இருமல், தும்மல் காரணமாக வைரஸ் பரவக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால், வாய் கொப்பளித்து அதில் இருந்து பரிசோதனை செய்வது எளிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த முறையிலான பரிசோதனை குழந்தைகள் மற்றும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் செய்வது இயலாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. நோய் அறிகுறி ஏற்பட்ட 72 மணி நேரத்தில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஆய்வில், இந்தப் பரிசோதனைக்கு சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டியது இல்லை. வீட்டிலேயே அறிகுறிகள் இருப்பவர்கள் தாங்களாகவே, வாய் கொப்பளித்து அந்த திரவத்தை மருத்துவமனைக்கு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் நிதிச் சுமையும் குறைகிறது. இந்த முறையிலான பரிசோதனையில் அனைத்து முடிவுகளும் பாசிடிவ் ஆக வந்து இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

    பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையார் - எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையார் - எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்

    பெரும்பாலானவர்கள் 72 சதவீதம் பேர் ஸ்வேப் முறையிலான பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், வெறும் 24 சதவீதம் பேர் மட்டுமே, வாய் கொப்பளிக்கும் திரவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்வேப் முறையிலான பரிசோதனைக்கு பெரிய அளவில் சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அதிகமாக வாங்க வேண்டியது இருக்கிறது. ஆனால், மாற்று பரிசோதனைக்கு இதெல்லாம் தேவையில்லை.

    இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் நாம் வீடுகளில் சாதாரணாக வாய் கொப்பளித்து துப்பும்போது அதிலும் கொரோனா இருக்கலாம். எனவே வாய் கொப்பளித்து துப்பும் இடத்தை சுத்தப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    English summary
    Coronavirus: Gargle water test instead of Swab test recommended by Indian medical council of india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X