கொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு அறிவிப்பு
டெல்லி: மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்கள் சந்தேகங்களை களைவதற்கும் மத்திய அரசு ஒரு வாட்ஸ்அப் ஹெல்ப் டெஸ்க் ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு நபர்களுக்கும், பலவகையான சந்தேகங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சந்தேகங்கள் இருப்பதால், அனைவருக்கும் தனித்தனியாக விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வாட்ஸப் டெஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பரை உங்களது தொலைபேசி எண்ணில் சேமித்துக் கொண்டு, அதற்குபிறகு வாட்ஸ்அப் மூலமாக உங்களது சந்தேகங்களை அரசிடம் கேளுங்கள்.

இதுதவிர அரசு இரண்டு ஹெல்ப்லைன் நம்பர்களை ஏற்படுத்தி உள்ளது. இவை இலவச தொலைபேசி எண்கள் ஆகும். இது தவிர இந்த இமெயில் முகவரிக்கும், உங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் டெஸ்க் நம்பர்: 9013151515
ஹெல்ப்லைன் நம்பர்: +91-11-23978046 மற்றும் 1075 (toll-free)
இ-மெயில் முகவரி: ncov2019@gov.in