டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரெட் ஸோன்" 129 மாவட்டங்கள்.. யாருக்கு தளர்வு கிடைக்கும்.. அரசின் ஜெட்வேக நடவடிக்கை.. பரபர தகவல்கள்

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது... இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட இருப்பதாகவும், அவை மே 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    கொரோனாவைரஸ் மிரட்டலில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை.. 2ம்கட்ட லாக்டவுன் நமக்கு நடந்து வருகிறது.. ஊரடங்கினால் மக்கள் முடங்கி கிடந்தாலும், தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டாலும், ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்தபடியே உள்ளன.

    இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.. பிரதமரிடம் நடத்தப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையிலும் இதைதான் பெரும்பாலான முதல்வர்கள் வேண்டுகோளாக விடுத்துள்ளனர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    மாநிலங்களின் நிலவரங்களை கேட்டறிந்த பிரதமரும் இதை பற்றின அறிவிப்பினை எந்நேரமும் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் மீண்டும் நீட்டிக்கப்படுமா? அல்லது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அவை தளர்த்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சூசகமாக ஒரு தகவலை வெளிப்படுத்தி உள்ளது.

    மண்டலங்கள்

    மண்டலங்கள்

    இதுதொடர்பாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது.. அதன்படி, நாடு முழுவதும் ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் மே3-க்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவதற்காக குறிப்பிடத்தக்க அளவுக்குத் தளர்வுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.. இதற்கான புதிய வழிகாட்டுதல்கள், ஊரடங்கு முடிந்து அதாவது மே 4ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும், அது சம்பந்தமாக விரைவில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    கடந்த 28 நாட்களில் புதிதாக தொற்று கண்டறியப்படாத கிரீன் ஜோனில் இருக்கும் மாவட்டங்கள், மற்றும் 14 நாட்களில் தொற்று கண்டறியப்படாத ஆரஞ்சு ஜோனில் இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தளர்த்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது..ஏற்கனவே தீவிரம் இல்லாத ஆரஞ்சு ஜோன்களின் எண்ணிக்கை 207-ல் இருந்து 297 ஆக உயர்ந்துள்ளது.

    பட்டியல்

    பட்டியல்

    நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், கடந்த ஒரு வாரமாக 80 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு இல்லை, 47 மாவட்டங்களில் 2 வாரமாக ஒருவருக்கு கூட கொரோனா புதிதாக தாக்கவில்லை, 39 மாவட்டங்களில் 21 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தாக்கம் இல்லை, 28 நாட்களாக 17 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா புதிதாக இல்லை என்று பட்டியலிட்டார்.. இது நமக்கு ஓரளவு ஆறுதலாகவே உள்ளது.

    வாய்ப்பு குறைவு

    வாய்ப்பு குறைவு

    எனினும், 9 மாநிலங்களில் 15 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது... இதற்கு அடுத்துள்ள லிஸ்ட்டில்தான் சென்னை உட்பட பல மாவட்டங்கள் வரிசையில் உள்ளன. ஆனால் ரெட்ஜோன் என்பதில் இருந்து வெளியேற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருவதால், இப்போதைக்கு 129 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளுக்கு வாய்ப்புகள் குறைவு என்றுதான் சொல்லப்படுகிறது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ரெட்ஜோன் என்றாலும், அங்கெல்லாம் ஹாட் ஸ்பாட்கள் என்னென்ன என்பதையும் கண்டறிந்து முழு வீச்சில் வைரஸை ஒழிக்க மத்திய இறங்கி உள்ளது.. அதனால் எப்படியும் மே 3ம் தேதி பிறகும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது... அதேசமயம், வைரஸ் தொற்று குறைவான பகுதிகளில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற கடைகளையும் திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    coronavirus: homa affairs ministry statement about lockdown extend
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X