டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொஞ்சம் சிக்கலான கேஸ்.. டெல்லியை உலுக்கிய ஒரு பெண்.. வரிசையாக பலருக்கு பரவிய கொரோனா.. பகீர் கதை

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதும் அதன் பின் அவருடைய உறவினர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதும் அதன் பின் அவருடைய உறவினர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இரண்டாவதாக பாதிக்கப்பட்ட மாநிலம்தான் டெல்லி. டெல்லியில்தான் கேரளாவிற்கு அடுத்து பலருக்கு கொரோனா ஏற்பட்டது. தற்போது டெல்லியில் மொத்தமாக 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அங்கு கொரோனா காரணமாக ஏற்கனவே ஒருவர் பலியாகிவிட்டார். இதனால் தற்போது டெல்லி மொத்தமும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

இது சூப்பர்ல.. ஒரு சீட்டுல ஒருத்தர் மட்டும்தான்.. ப்ரீயா உட்காருங்க.. கொரோனா அலர்ட்! இது சூப்பர்ல.. ஒரு சீட்டுல ஒருத்தர் மட்டும்தான்.. ப்ரீயா உட்காருங்க.. கொரோனா அலர்ட்!

டெல்லி பெண்

டெல்லி பெண்

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதும் அதன் பின் அவருடைய உறவினர்கள், அவர் சந்தித்த பலருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த பெண் பிப்ரவரி 19ம் தேதி சவூதி அரேபியா சென்று இருக்கிறார். அதன்பின் மார்ச் 10-ம் தேதி சவுதியில் இருந்து திரும்பி டெல்லி வந்துள்ளார். தன்னுடைய மகன் உடன் சவுதி அரேபியா சென்றுவிட்டு அவர் இந்தியா வந்துள்ளார்.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

அதன்பின் மார்ச் 12ம் தேதி அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனால் அதே தேதியில் இவர் லோக்கல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை பெயர் ஜிடிபி மருத்துவமனை ஆகும். அதன்பின் கொரோனா அவருக்கு அறிகுறி தொடர்ந்தது. இதனால் மார்ச் 15ம் தேதி ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு 17ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மோசம்

மோசம்

இதன் பின்தான் அந்த திகில் கதை தொடங்கியது. மார்ச் 20ம் தேதி இவரின் தம்பிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதே நாளில் அவரின் அம்மாவிற்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 21ம் தேதி இவரின் இரண்டு மகள்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதே நாள், அந்த பெண்ணை மருத்துவமனை அழைத்து சென்ற கேப் டிரைவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

வேறு யார்

வேறு யார்

அதன்பின் மார்ச் 22ம் தேதி அந்த பெண்ணுக்கு முதலில் சிகிச்சை கொடுத்த ஜிடிபி மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பெண்ணின் மகனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது. அதேபோல் அந்த மருத்துவரின் மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது. இவர்கள் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதில் சிக்கல் என்னவென்றால் கடந்த ஒரு வாரத்தில் அந்த மருத்துவர் எத்தனை பேரை சந்தித்தார். எத்தனை பேருக்கு சிகிச்சை அளித்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அந்த கேப் டிரைவர் எத்தனை பேர் உடன் பயணம் செய்தார். எத்தனை பேரை சந்தித்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இன்னொரு பக்கம் அந்த பெண்ணின் தம்பிக்கு கொரோனா தாக்கியுள்ளது. அவர் பொது நிகழ்ச்சி பலவற்றில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்

மிக மோசம்

அவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம் டெல்லியில் அவர் கொரோனா ஸ்டேஜ் 3யை உருவாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொரோனாவின் மூன்றாவது வகை பரவல் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியது. கொரோனா ஏற்பட்ட நபர் மூலம் அவரின் உறவினர்கள் மட்டும் இன்றி அவருக்கு சம்பந்தமே இல்லாத வேறு நபர்களுக்கும் வைரஸ் பரவினால் அது ஸ்டேஜ் 3 . இதை community transmission என்று கூறுவார்கள். டெல்லியில் இது ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

English summary
Coronavirus: How a Delhi patient became a 'source' of spread in the Territory: Shocking Story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X