டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளது இந்திய விமானப் படை விமானம். மேலும் 36 வெளிநாட்டவரையும் விமானப் படை விமானம் அழைத்து வந்துள்ளது.

Recommended Video

    செய்தி தெரியுமா | 27-02-2020 | Oneindia tamil Morning news

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிலைகுலைய வைத்துள்ளது. 2000க்கும் அதிகமானோரை பலி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் நடுநடுங்க வைத்துள்ளது.

    Coronavirus: IAF flight brings back 76 Indians from China

    இதனையடுத்து சீனாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் நேற்று விமானப் படை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இவர்களுடன் வங்கதேசம், சீனா, மியான்மர், மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகாஸ்கர் நாடுகளைச் சேர்ந்த 36 பேரையும் விமானப் படை விமானம் அழைத்து வந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்து 647 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    English summary
    An IAF C17 transport aircraft evacuated a group of 76 Indians from the coronavirus outbreak epicentre, Wuha, China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X