டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஷ்டம்.. அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா.. இதுதான் ஒரே வழி.. டெஸ்டிங் விதிமுறையை மாற்றிய மத்திய அரசு!

கொரோனா வைரஸ் சோதனை முறைகளை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மாற்றி அமைத்து உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் சோதனை முறைகளை மத்திய அரசு மற்றும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மாற்றி அமைத்து உள்ளது.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க அறிகுறி இல்லாமல் பரவ தொடங்கி உள்ளது. தொடக்க காலங்களில் கொரோனா ஏற்பட்டால் உடனே இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் ஏற்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவுகிறது.

    அதாவது ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியாமலே அதை பரப்பும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலே, கொரோனா உள்ள ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது? மருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

    என்ன சோதனை மாற்றம்

    என்ன சோதனை மாற்றம்

    இதனால்தான் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. அதாவது தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு காரணம் அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா என்று கூறுகிறார்கள். இதை தடுக்க மத்திய அரசு டெஸ்டிங் விதிமுறைகளை மாற்ற வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமின்றி அறிகுறி இல்லாதவர்களையும் சோதனை செய்ய வேண்டும். மத்திய அரசு இதில் பின் தங்கி உள்ளது.

    விதிமுறையில் மொத்தமாக மாற்றம்

    விதிமுறையில் மொத்தமாக மாற்றம்

    இதனால் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் டெஸ்டிங் விதிமுறைகளை நாடு முழுக்க மாற்றி உள்ளது. அதன்படி இதுவரை கொரோனா அறிகுறியான இருமல், காய்ச்சல், மூச்சு அடைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதை 'சாரி' என்று அழைப்பார்கள். அதாவது தீவிர சுவாச நோய் தொற்று (severe acute respiratory illness). இந்த அறிகுறி இருந்தால் மட்டுமே இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டு வந்தது

    இனிமேல் எப்படி

    இனிமேல் எப்படி

    இனிமேல் காய்ச்சல், இருமல், வறண்ட தொண்டை, மூக்கில் சளி ஆகியவை இருந்தால் கொரோனா சோதனை செய்யப்படும். அதேபோல் கொரோனா அதிகம் பரவிய ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் மக்கள். கொரோனா தீவிரமாக பரவி வரும் பகுதியில் இருக்கும் மக்கள். வெளியூரில் இருந்து வேறு ஊர்களுக்கு கடந்த 14 நாட்களில் சென்ற மக்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். அறிகுறி இல்லையென்றாலும் சோதனை.

    அறிகுறி இல்லாத சோதனை

    அறிகுறி இல்லாத சோதனை

    அதேபோல் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்துவிட்டு கடந்த 14 நாட்களாக அறிகுறி இல்லாமல், இருக்கும் நபர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல் கொரோனா உள்ளவர்களை நேரடியாக தொடர்பு கொண்ட பிரைமரி காண்டாக்ட் எல்லோருக்கும் அறிகுறி இல்லை என்றாலும் கொரோனா சோதனை செய்யப்படவுள்ளது. அதாவது முன்பு ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அவரை தொடர்பு கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    இனிமேல் அப்படி இல்லை

    இனிமேல் அப்படி இல்லை

    ஆனால் இனி வரும் நாட்களில் இப்படி பிரைமரி தொடர்பு கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அறிகுறி இல்லாமலே கொரோனா இருக்க வாய்ப்புள்ளது. அதனால் இவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்தாமல் உடனே கொரோனா சோதனையை முடுக்கிவிடுவார்கள். பிசிஆர் எனப்படும் ஆர்என்ஏ சோதனை மற்றும் ரேபிட் ஆண்டிபாடி சோதனை இரண்டும் இதில் செய்யப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

    புதிய இலக்கு

    புதிய இலக்கு

    இது வரை நாடு முழுக்க மொத்தம் 1,44,910 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு இரண்டு, மூன்று முறை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1,30,792 பேருக்கு நேற்று வரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க மாநில அரசுகள் கொரோனா சோதனையை முடுக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்குள் 2.5 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    English summary
    Coronavirus: ICMR and Central government changes the testing strategy to tackle COVID-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X