டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்...தொடர்ந்து 7வது நாளாக...இந்தியாவில் தொற்று அதிகரிப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 50,000த்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏழாவது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகாரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,06,613 ஆக அதிகரித்து, இறப்பும் 39,820ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், இன்னும் 5,86,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 66.31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

Coronavirus: Increases in India 7th day consecutive day

இதுவரை அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 2,14,84,402 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிழமை மட்டும் 6,19,652 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா புதிதாக வருபவர்களுக்கும், மீண்டு வருபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 10 ஜூன் 2020ல் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக கூடுதலாக அதிகரித்துள்ளது.

உலகை உலுக்கிய லெபனான் வெடிவிபத்து- பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களுக்கும் சேதம்உலகை உலுக்கிய லெபனான் வெடிவிபத்து- பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களுக்கும் சேதம்

நாட்டிலேயே மகாராஷ்டிரா 4,57,956, தமிழ்நாடு 2,68,285, ஆந்திரப்பிரதேசம், 1,76,333, கர்நாடகம் 1,45,830, டெல்லி 1,39,156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் வேகம் காட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் இருக்கின்றன. மூன்றாம் கட்ட மனித ஆய்வுக்குப் பின்னர் வெற்றி பெற்றால்தான் மனிதருக்கு தடுப்பு மருந்து போடப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவியல் ஆராய்ச்சியாளர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

English summary
Coronavirus: Increases in India 7th day consecutive day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X