டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப் போகிறது.. ராகுல் காந்தி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: இப்படியே இருந்தால், இந்தியா மிக அதிகமான விலையை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

Recommended Video

    இந்தியாவில் வைரஸ் 10 மடங்கு அதிகரிக்க கூடும்.. நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 150ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் அக்கவுண்டில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    Coronavirus: India is going to pay an extremely heavy price, says Rahul Gandhi

    அதில், மிகத் துரிதமாக மற்றும் ஆவேசமான நடவடிக்கைகள்தான் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் மத்திய அரசின் திறமையின்மை மற்றும் தீர்க்கமின்மை போன்ற காரணங்களால் இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க போகிறது, என்று கடும் வார்த்தைகளில் எச்சரித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரை அழைக்க வேண்டும்?-முழு விபரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரை அழைக்க வேண்டும்?-முழு விபரம்

    நேற்று அவர் நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியின் போதும், கொரோனா வைரஸ் தாக்கம், ஆரோக்கியத்தில், மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதனிடையே, ராகுல் காந்தி டுவிட்டர் பதிவின் பின்னூட்டங்களில், பாஜக ஆதரவு நெட்டிசன்கள், ஆவேசமாக கருத்து கூற தொடங்கியுள்ளனர். அரசாங்கம் வேகமாகத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில்தான் நம்மை விட அதிக பாதிப்பு இருக்கிறது என்றெல்லாம், அவர்கள், கருத்துக்களைக் கூறி வருவதை பார்க்க முடிகிறது.

    English summary
    Quick aggressive action is the answer to tackling the Coronavirus. India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X