டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசு மூத்திரம் குடிக்கச் சொல்லி...கொரோனா வதந்தி...இந்தியா முதலிடம்...ஆய்வில் தகவல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: தவறான தகவல்கள், வதந்திகள், வன்முறை, சதி ஆகியவை 87 நாடுகளில், 25 மொழிகளில் பரவியுள்ளது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயலில் அதிகமாக இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஸ்பெயின், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஈட்டுபட்டுள்ளன என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ட்ராபிக்கல் மெடிசன் அண்ட் ஹைஜீன் என்ற இதழில் வெளியாகி இருக்கும் செய்தியில், ''கொரோனாவைப் பற்றிய எழுத்து மதிப்பீடுகள் குறித்து 2,276 அறிக்கைகள் கிடைத்தன. அவற்றில் 1,865 போலியானவை. கொரோனா வைரஸ் குறித்த 2,311 அறிக்கைகளில் 89 சதவீதம் வதந்தி, 7.8 சதவீதம் சதி செய்யப்பட்டவை. 3. 5 சதவீதம் வன்முறை ஏற்படுத்தும் வகையில் இருந்தன'' என்று தெரிய வந்துள்ளது.

Coronavirus: India spread more coronavirus rumours

உடல்நலம் பாதிப்பு, இறப்பு விகிதம், நோய் கட்டுப்பாடு, சிகிச்சை, குணப்படுத்துதல், நோய் தோற்றம் ஆகியவை தவறான வதந்திகளால் பரப்பப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா பற்றிய தவறான வதந்திகளை பரப்பி வந்துள்ளனர்.

மக்களிடம் 2019, டிசம்பர் 31ல் இருந்து 2020, ஏப்ரல் 5 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. வங்கதேசம், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருக்கும் மருத்துவர்கள், தொற்று நோய் நிபுணர்கள் இதுகுறித்த ஆய்வை 800 பேரிடம் மேற்கொண்டனர். ஃபேஸ்புக், ட்விட்டர், ஆன்லைன் செய்தித்தாள்கள் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரப்பி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக!வேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக!

பசு மூத்திரம், சாணம் ஆகியவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பியது, கொரோனா வைரஸ் பாம்பில் இருந்து தொற்றியது, மொபைல் போன் கொரோனா வைரஸை பரப்பும் போன்றவை வதந்திகளே. ஆசிய நாடுகளில் தவறான போலிச் செய்திகள் மூலம் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது, கொரோனா வந்து இருக்குமோ என்ற பயத்தால் தற்கொலைக்கு முயற்சித்தது என்று பல்வேறு காரணங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

English summary
Coronavirus: India spread more coronavirus rumours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X