டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன்.. ஒற்றை மருந்துக்கு சண்டை.. டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை.. பின்வாங்கிய இந்தியா!

கொரோனா உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு உலகம் முழுக்க சண்டை நடக்க தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு உலகம் முழுக்க சண்டை நடக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

Recommended Video

    Trump says they need hydroxychloroquine or India will face retaliation

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு நடக்கும் சண்டை குறித்து தெரிந்து கொள்ளும் முன் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து எப்படிபட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது குய்ன் வகை மருந்துகளில் ஒன்றாகும். இது மலேரியாவிற்கு எதிரான மருந்து ஆகும்.

    முதலில் மலேரியாவிற்கு எதிராக 1930களுக்கு முன் குய்ன் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் அதன்பின் குளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது.

     ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எப்படிப்பட்டது

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எப்படிப்பட்டது

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதிக பின் விளைவுகளை கொண்ட மருந்துகள் ஆகும். குளோரோகுய்ன் மருந்தின் அப்டேட் வெர்ஷன்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன், குளோரோகுய்ன் மருந்தை விட கொஞ்சம் செயல் திறன் அதிகம் கொண்டது. குறைவான பக்க விளைவு கொண்டது. ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

    இந்தியாதான் அதிகம் உற்பத்தி செய்கிறது

    இந்தியாதான் அதிகம் உற்பத்தி செய்கிறது

    உலகில் இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மலேரியாவும், கொரோனாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி செயல்படுகிறது. இதனால் கொரோனாவிற்கு எதிராக தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம் இந்த மருந்தை பரிந்துரை செய்துள்ளது.

    இதுதான் உண்மை

    இதுதான் உண்மை

    ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து கொரோனாவை குணப்படுத்தாது. கொரோனா வைரஸ், மனித உடம்பில் இருக்கும் வைரஸ் போலவே வேடம் அணிந்து நமது எதிர்ப்பு சக்தி அளிக்கும் செல்களை குழப்பும். இதனால்தான் இந்த கொரோனாவை கொல்வது கடினமாக இருக்கிறது. மலேரியாவும் இதேபோல்தான் செயல்படும். ஒருவருக்கு மலேரியா ஏற்பட்டாலும் அவரின் எதிர்ப்பு சக்தி இப்படித்தான் அழிக்கப்படும்.

    இந்தியா விதித்த தடை

    இந்தியா விதித்த தடை

    அதனால்தான் இரண்டுக்கும் ஒரே மருந்தினை பரிந்துரை செய்கிறார்கள். இந்த மருந்து, கொரோனாவின் வேடமணியும் செயல் திறனை குறைக்கும். இதனால் இந்தியாவில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் பாராசிட்டமால் உள்ளிட்ட 26 வகை மருந்துகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது.

    அமெரிக்கா கோரிக்கை

    அமெரிக்கா கோரிக்கை

    ஆனால் இந்தியாவின் இந்த ஏற்றுமதி தடைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை எங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தியா எங்களுக்கும் இந்த ஏற்றுமதி தடையை விதிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியா எங்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டி இருக்கும், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    உலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம்

    உலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம்

    அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இப்படி அழுத்தம் கொடுத்து இருக்கும் நிலையில் ஐரோப்பாவில் உள்ள நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கேட்க தொடங்கி உள்ளது. பிரேசில் ஏற்கனவே இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கேட்டுள்ளது. அதேபோல் ஸ்பெயின் இதற்காக இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இத்தாலியும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கேட்க உள்ளது.

    இந்தியா கொடுக்கும் சிக்னல்

    இந்தியா கொடுக்கும் சிக்னல்

    இதனால் இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் இருந்து கடுமையான அழுத்தம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தியா இதனால் தங்களுடைய ஏற்றுமதி தடை முடிவில் இருந்து பின் வாங்க வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். தற்போது அதேபோல் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம் என்று இந்தியா கூறியுள்ளது.

    மனித நேயத்தை அடிப்படையாக் கொண்டு இந்த முடிவை எடுக்கிறோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் பாராசிட்டமால் ஆகிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதான் திட்டம்

    இதுதான் திட்டம்

    இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். மொத்தம் உள்நாட்டு தேவை அதோடு கூடுதலாக 25% கையிருப்பை வைத்துக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் இந்தியாவிடம் உள்ள ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் விற்பனை செய்யப்படும்.

    English summary
    Coronavirus: India may take a stand back in the export ban on hydroxychloroquine to other nations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X