டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் முதல் பிரச்சனை.. கொரோனா சோதனையில் தடுமாறும் இந்தியா.. தமிழகமும் ஸ்லோதான்.. பின்னணி!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இன்னும் பலருக்கு கொரோனா குறித்த போதிய சோதனைகள் செய்யப்படவில்லை.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இன்னும் பலருக்கு கொரோனா குறித்த போதிய சோதனைகள் செய்யப்படவில்லை. இன்னும் இந்தியாவில் போதுமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவில்லை.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 775 பேருக்கு இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் 147 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    மிகவும் தாமதம்

    மிகவும் தாமதம்

    இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இன்னும் பலருக்கு கொரோனா குறித்த போதிய சோதனைகள் செய்யப்படவில்லை. இன்னும் இந்தியாவில் போதுமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இந்தியாவில் இதுவரை மொத்தம் 24254 பேருக்கு மட்டும்தான் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக 10 லட்சம் பேரில் 18 பேருக்கு மட்டும்தான் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    மோசம்

    மோசம்

    இத்தனை மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் வெறும் 24 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.போதிய சோதனை மையங்கள் இல்லாத காரணத்தால் சோதனைகள் சரியாக செய்யப்படுவது இல்லை. இது கொரோனா பரவுவதை மேலும் அதிகரிக்கும். ஏனென்றால் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்த பின்தான் அவரின் காண்டாக்ட் டிரெஸ் செய்யப்பட்டு, அடுத்தடுத்த நபர்களுக்கு சோதனை செய்யப்படும்.

    சோதனை செய்யவில்லை

    சோதனை செய்யவில்லை

    ஆனால் ஒருவருக்கு சோதனை செய்யப்படவில்லை என்றால் அவரின் காண்டாக்ட் எதுவும் டிரெஸ் செய்யப்படாது. அப்படி செய்யயப்படவில்லை என்றால்,அவர்கள் மூலம் கொரோனா பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பரவுதலை கணிக்க முடியாது. ஆகவே எவ்வளவு விரைவாக ஒருவருக்கு கொரோனா சோதனை செய்கிறோமோ அவ்வளவு விரைவாக சோதனை செய்ய வேண்டும். ஆனால் இந்தியா இங்குதான் பின்னடைவை சந்திக்கிறது.

    வேறு நாடுகள் சோதனை

    வேறு நாடுகள் சோதனை

    ஆம் உலக நாடுகள் மிக அதிக அளவில் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, சீனா, இத்தாலி, லண்டன், தென்கொரியா ஆகிய நாடுகள் மிக அதிக அளவில் கொரோனா சோதனைகளை செய்து வருகிறது. இத்தாலியில் 3 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒன்றரை லட்சம் பேருக்கும் , யுகேவில் ஒரு லட்சம் பேருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா இன்னும் 25 ஆயிரத்தை தொடவில்லை.

    கேரளா முன்னிலை

    கேரளா முன்னிலை

    அதேபோல் இந்தியாவில் கேரளாவில் 4800 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 2200 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இப்போதுதான் 1039 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் தென்னிந்தியாவில் மிக குறைந்த அளவில்தான் கொரோனா சோதனைகளை செய்துள்ளது. இதனால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவினால் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: India testing less number of suspects is a big blow the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X