டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி.. இனி இந்தியாவை நம்பித்தான் உலகமே இருக்கும்.. ஐசிஎம்ஆர் போடும் அதிரடி பிளான்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் எந்த நாடு வேண்டுமானாலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கலாம், ஆனால் இந்தியாவைதான் உலக நாடுகள் உற்பத்திக்காக நம்பி இருக்கும் என்று கூறுகிறார்கள்

Recommended Video

    Corona Vaccine: ICMR போடும் அதிரடி பிளான்

    கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தீவிரமான ஆராய்ச்சி உலகம் முழுக்க நடந்து வருகிறது. உலகம் முழுக்க 120 நிறுவனங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, சீனாவின் சினோவேக்ஸ், இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட முக்கியமான தடுப்பு மருந்து சோதனைகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மனிதர்கள் மீதான சோதனை இதில் நடந்து வருகிறது.

    இதுவரை நடந்த கொரோனா தடுப்பூசி டிரையல் சக்சஸ்.. பக்கவிளைவு இல்லை.. அறிவித்த அமெரிக்க மருந்து நிறுவனம்இதுவரை நடந்த கொரோனா தடுப்பூசி டிரையல் சக்சஸ்.. பக்கவிளைவு இல்லை.. அறிவித்த அமெரிக்க மருந்து நிறுவனம்

    என்ன கருத்து

    என்ன கருத்து

    தடுப்பு மருந்து சோதனை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ள கருத்தில், உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதை அதிகமாக தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும்தான் இருக்கிறது. உலகம் மொத்தத்திற்கும் மருத்துவமனையாக இந்தியா செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    இந்தியா முக்கியம்

    இந்தியா முக்கியம்

    உலகம் முழுக்க 60% மருந்துகளை நாம்தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். முக்கியமான உலகின் பெரும்பாலான தடுப்பூசி இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. உலகில் பலருக்கும் இந்த விஷயம் தெரியும். ஆப்ரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு எல்லாம் இந்தியாதான் மருந்துகளை அனுப்புகிறது. மருத்துவ உலகில் இந்தியா ஹீரோ போல திகழ்கிறது.

    உலக உற்பத்தி

    உலக உற்பத்தி

    உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவைதான் இந்த நாடுகள் அதன் உற்பத்திக்கு நம்பி இருக்க வேண்டும். தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய அவர்கள் இந்தியாதான் வர வேண்டும். உலகம் முழுக்க கொரோனா மருந்தை அனுப்ப வேண்டும் அவர்கள் இந்தியாவை நாட வேண்டும்.

    நாம்தான் ஹீரோ

    நாம்தான் ஹீரோ

    இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டால் நேரடியாக அவர்கள் இந்தியாவிற்குதான் உற்பத்தி செய்ய வருவார்கள். இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடந்து வருகிறது. இரண்டு விதமான கொரோனா தடுப்பு மருந்து சோதனைகளை மனிதர்களிடம் நாம் செய்து வருகிறோம், என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

    English summary
    Coronavirus: India will play a major role in vaccine production says ICMR today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X