டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துவங்கியது மெகா மீட்பு பணி.. வெளிநாடுகளுக்கு சென்ற ஏர்இந்தியா விமானங்கள்.. மீட்கப்படும் இந்தியர்கள்!

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக முதல்கட்டமாக இன்று 10 விமானங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக முதல்கட்டமாக இன்று 10 விமானங்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறது.

Recommended Video

    இந்தியர்களை மீட்க விரைந்த போர்க்கப்பல்கள்... என்ன சிறப்பு?

    கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் முடிவில் மத்திய அரசு களமிறங்கி உள்ளது.

    இதற்காக பெரிய அளவில் மீட்பு பணி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட மீட்பு பணிகள் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. 13ம் தேதி வரை முதற்கட்ட மீட்பு பணிகள் நடக்கும்.

    கொரோனா வைரஸ் தாக்குதல்.. அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா?.. டிரம்ப் சொன்ன பரபரப்பு பதில்! கொரோனா வைரஸ் தாக்குதல்.. அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா?.. டிரம்ப் சொன்ன பரபரப்பு பதில்!

    மீட்பு பணிகள்

    மீட்பு பணிகள்

    மொத்தமாக 19 லட்சம் இந்தியர்களை மீட்க இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. இதில் விமானம் மூலம் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முதற்கட்டமாக மீட்கப்பட உள்ளனர். இன்று இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட உள்ளனர்.ஈரான், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பலர் சிக்கி தவிக்கிறார்கள்.

    இன்று எத்தனை

    இன்று எத்தனை

    இன்று மொத்தம் 10 விமானங்கள் மூலம் பல நாடுகளில் இருந்து மக்கள் மீட்டு அழைத்து வரப்பட உள்ளனர். பெரும்பாலும் அரபு நாடுகளில் இருந்து அதிகமான நபர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். முதல் கட்டமாக இன்று காலை 9.30 மணிக்கு அபுதாபியில் இருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு முதல் விமானம் வருகிறது. அதேபோல் நாட்டின் பிற பகுதிகளான டெல்லி, மும்பைக்கும் இன்று இந்த மீட்பு விமானங்கள் வருகிறது.

    வேகமாக தொடரும்

    வேகமாக தொடரும்

    ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்பாக ஏர்இந்தியா விமானங்கள் மூலம் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து ஐஎன்எஸ் ஐலஷ்வா கப்பல் மற்றும் ஐஎன்எஸ் மாகர் ஆகிய கப்பல்கள் மாலத்தீவிற்கு சென்று உள்ளது.அதேபோல் இன்னொரு பக்கம் ஐஎன்எஸ் ஷர்தூல் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

    யார் இவர்கள் எல்லாம்

    யார் இவர்கள் எல்லாம்

    இதில் பெரும்பாலானோர் தங்கள் வேலையை இழந்துள்ளனார். இந்த நிலையில் இவர்களை மீட்டு இந்தியாவிற்கு பாதுக்காப்பாக அழைத்து வர உள்ளனர். இந்த வாரம் மட்டும் 15000 ஆயிரம் பேர் மீட்கப்படுவார்கள். மொத்தம் 12 நாடுகளில் இருந்து இந்தியர்கள் முதல்கட்டமாக மீட்கப்படுவார்கள். அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட உள்ளனர்.

    கட்டணம் என்ன

    கட்டணம் என்ன

    ஆனால் இவர்கள் இலவசமாக அழைத்து வரப்படவில்லை. இவர்களிடம் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களிடம் 15-16 ஆயிரம் ரூபாயும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 50000-100000 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏர்இந்தியா விமானம் மற்றும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்படுவார்கள்.

    English summary
    Coronavirus: Indians mega evacuation begins starts from today, More than 2 lakhs will come back to India today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X