• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE
28 Mar, 2020         14:42:04 IST

Breaking News Live: இந்தியாவில் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது- டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரி தகவல்

|

டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newest First Oldest First
2:42 PM, 28 Mar
சமுதாய பரவலானது நபருக்கு நபர் பரவுவதை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எந்த நோய்க்கும் மிக முக்கியமான நிலை இதுவாகும். இந்த ஸ்டேஜில் தொற்றுநோய் வேகமாக பரவி மேலும் மேலும் மக்களை பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதுபற்றி டாக்டர் கிரிதர் கியானி கூறுகையில், 'கோவிட் -19 சிறப்பு மருத்துவமனையை உருவாக்க மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. ஏனென்றால், இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் சமுதாய பரவலாக வெடிக்கக்கூடும். அதிகாரப்பூர்வமாக அதை சொல்லவில்லை என்றாலும், ஸ்டேஜ் 3 தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறோம். இப்போதைக்கு நமக்கு தேவையான பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் கோவிட் -19 மருத்துவமனையும் இல்லை, என்று கூறியுள்ளார்.
2:15 PM, 28 Mar
கொரோனா: இந்தியாவில் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது - டாக்டர் கிரிதர் ஞானி. கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி தகவல். இந்தியா ஸ்டேஜ் 3ன் தொடக்கத்தில் உள்ளது - டாக்டர் கிரிதர் ஞானி.
12:11 PM, 28 Mar
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ்.
12:11 PM, 28 Mar
கேரளாவில் 61 வயது நபர் கொரோனாவால் பலி. கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் நபர்.
11:45 AM, 28 Mar
நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் மரணம். ஏற்கனவே இதே வார்டில் 3 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு. மரணமடைந்தவர்களின் கொரோனோ பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.
11:29 AM, 28 Mar
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு. மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
7:55 AM, 28 Mar
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்வு
7:10 AM, 28 Mar
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது
6:51 AM, 28 Mar
அமெரிக்காவில் கொரோனா பாதித்ததோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது
6:31 AM, 28 Mar
கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,498 ஆக உயர்ந்துள்ளது
10:07 PM, 27 Mar
கொரோனா பாதிப்புக்கு மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி உயிரிழப்பு
7:46 PM, 27 Mar
கொரோனா: மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு தள்ளிவைப்பு.நீட் தேர்வுக்கு மறு தேதி அறிவிக்கப்படவில்லை
6:11 PM, 27 Mar
கேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா. காசர்கோட்டில் இருந்து மட்டும் 34 பேருக்கு கொரோனா கேரளாவில் இதுவரை 176 பேருக்கு கொரோனா ஏற்ப்பட்டுள்ளது. 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 164 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள்
4:53 PM, 27 Mar
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன்.
4:17 PM, 27 Mar
நாடு முழுவதும் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு. மகாராஷ்டிராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147. ராஜஸ்தானில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு- கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு. கர்நாடகாவில் 10 மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா தாக்குதல்
3:31 PM, 27 Mar
கொரோனா தடுப்பு பணி- அனைவரும் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
2:47 PM, 27 Mar
கொரோனாவால் கேரளாவில் மதுபானம் விற்பனைக்கு தடை- 38 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை
2:38 PM, 27 Mar
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 51 கோடி வழங்கியது ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை
2:38 PM, 27 Mar
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டெண்டுல்கர் ரூ25 லட்சம் நிதி உதவி
1:31 PM, 27 Mar
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 4,100 பேர் மீது வழக்கு
12:57 PM, 27 Mar
கர்நாடகாவில் கொரோனா தாக்குதலுக்கு மேலும் ஒருவர் பலி. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 740 ஆக உயர்வு
12:51 PM, 27 Mar
சிங்கப்பூரில் 1மீ. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை- 10,000 வெள்ளி அபராதம்
12:50 PM, 27 Mar
மலேசியாவில் 11 இடங்கள் கொரோனா நோய்த்தொற்று அபாயகரமான இடங்களாக பிரகடனம்
12:48 PM, 27 Mar
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் மத்திய தர வர்க்கத்தினர் பயனடைவர்: பிரதமர் மோடி பாராட்டு
11:48 AM, 27 Mar
சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார். மாநகரம் முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது - ஜெயக்குமார்
11:31 AM, 27 Mar
144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
10:46 AM, 27 Mar
சிபிலில் கடன் செலுத்தவில்லை என்று பதிவு செய்யவும் கூடாது என அறிவுறுத்தல்
10:40 AM, 27 Mar
கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது- ரிசர்வ் வங்கி
10:35 AM, 27 Mar
3 மாத தவணைக்கான வட்டியையும் தள்ளி வைத்தது ரிசர்வ் வங்கி
10:32 AM, 27 Mar
வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான 3 மாத தவணைகள் தள்ளிவைப்பு
READ MORE

coronavirus latest updates in tamil no need to panic says pm modi live updates

 
 
 
English summary
In the wake of Coronavirus outbreak and following the two new positive cases of the virus, Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday called an urgent meeting with Health Minister Satyendar Jain and other top officials at 3 pm on the government's preparations to deal with coronavirus. Here is the live updates.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X