டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுக்க களைகட்டிய ஒற்றுமை தீபம்.. தமிழக முதல்வர், துணை முதல்வர் விளக்கேற்றினர்

இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைத்து தீபம் ஏற்ற, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதையேற்று இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

Recommended Video

    ஞாயிறு இரவு 9 மணி 9 நிமிடம் | ஏன் ? எதற்கு? எப்படி? | ONEINDIA TAMIL

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுக்க பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    நாடு முழுக்க மொத்தம் 3671 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 485 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் கொரோனா என்னும் இருளுக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்து செய்லபட போகிறோம். நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தும் வகையில் கொரோனாவுக்கு எதிராக இன்று இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும்.

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, வெறும் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று நாடு முழுக்க மக்கள் விளக்கு ஏற்றினர். மெழுகுவர்த்திகளையும் ஏற்றினர்.

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    இரவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து, பிறகு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றினர். இதன்பிறகு மக்கள் பட்டாசு வெடித்தனர். இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் தீபம் ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    Coronavirus: lets turn off the light and fight the pandemic, PM Modi calls people of India

    மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றினர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.

    English summary
    Coronavirus: let's turn off the light today night and fight the pandemic, PM Modi calls people of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X