• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

Coronavirus in India LIVE: தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க அரசு அனுமதி

|

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் சென்னையை தவிர்த்து அனைத்து நகர்ப்புறங்களிலும் சலூன் கடைகளும் அழகு நிலையங்களும் திறக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

Newest First Oldest First
11:46 PM, 24 May
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க அரசு அனுமதி. பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி.
7:54 PM, 24 May
தமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 0- முதல் 12 வயதுக்கு உட்பட்ட 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு. 532 ஆண் குழந்தைகளும், 416 பெண் குழந்தைகளும் இதுவரை கொரோனாவால் பாதிப்பு.
7:53 PM, 24 May
சென்னை கொத்தவால்சாவடியில் கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதி. கொத்தவால்சாவடியில் காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடைகளை திறக்கலாம்.
6:40 PM, 24 May
கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு
6:39 PM, 24 May
சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,576
4:59 PM, 24 May
இடம்பெயர் தொழிலாளர்களுக்காக 2,818 சிறப்பு ரயில்கள்- இன்று மட்டும் 565 சிறப்பு ரயில்கள் இயக்கம்
3:25 PM, 24 May
அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
2:32 PM, 24 May
டெல்லியில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா ; கொரோனா பாதிப்பு 13,418 ஆக அதிகரிப்பு
10:50 AM, 24 May
சென்னை மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
10:27 AM, 24 May
புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
10:15 AM, 24 May
சென்னையில் கொரோனா பாதிப்பு விவரம்
9:23 AM, 24 May
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா- 147 பேர் மரணம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,868, ஆக அதிகரிப்பு. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3867 ஆக உயர்வு
9:12 AM, 24 May
தமிழகத்தில் 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி. அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அனுமதி. 55 வயதுக்குள் மேற்பட்ட பணியாளர்கள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தல். 25 சதவீதத் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தல்
7:21 AM, 24 May
உலகளவில் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதுவரை 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 53 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இறப்பு விகிதம் 13 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 87 சதவீதமாகவும் உள்ளது
7:20 AM, 24 May
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை தாண்டியது. பிரேசிலில் 3.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரமாக உயர்வு. ரஷ்யாவில் 3.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரஷ்யாவில் 3,388 பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.82 லட்சம் ஆகும். இத்தாலியில் 2.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
6:41 AM, 24 May
லூதியானாவிலிருந்து பீகாருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளரின் மனைவிக்கு பிரசவம். 100 கி.மீ. தூரம் நடந்தே பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளி மனைவிக்கு பிரசவம். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தை சிறிது நேரத்தில் இறந்தது
6:20 AM, 24 May
இன்று முதல் நகர்ப்புறங்களில் சலூன் கடைகளும் அழகு நிலையங்களும் திறக்கப்படுகின்றன. சுமார் 60 நாட்கள் கழித்து இன்று முதல் சலூன் கடைகள் திறப்பு. சென்னையை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி
10:10 PM, 23 May
தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி. தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்.
6:13 PM, 23 May
சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழ்கத்தில் 7491 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 103 பேர் பலியாகி உள்ளனர்.
6:09 PM, 23 May
தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
1:07 PM, 23 May
சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடல். 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நோக்கியா நிறுவனம் மூடல். நோக்கியா சொலுஷன்ஸ் நிறுவனத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் நிறுவனம் மூடல். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நோக்கியா நிறுவனம் மூடல்.
12:26 PM, 23 May
ஆர். எஸ். பாரதி கைது செய்யப்பட்டது ஏன். பட்டியலினத்தவரை விமர்சித்ததாலேயே ஆர்எஸ் பாரதி கைது- முதல்வர் விளக்கம்.
12:22 PM, 23 May
தமிழகத்தில் நாள்தோறும் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல நடவடிக்கை. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.
9:49 AM, 23 May
24ம் தேதி காலையில் இருந்து வழக்கம் போல் தமிழகத்தில் முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலூன்கள் செயல்படலாம். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் செயல்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் செயல்படும்
7:24 AM, 23 May
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் 16.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
6:22 AM, 23 May
சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கொரோனா
1:16 AM, 23 May
கராச்சி விமான விபத்தில் பலி 80 ஆக அதிகரிப்பு
11:06 PM, 22 May
கேரளாவில் மீண்டும் அதிகரிப்பு- ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு
10:59 PM, 22 May
கொரோனா லாக்டவுன்: அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 வழங்க எதிர்க்கட்சிகள் கூட்டம் வலியுறுத்தல்
10:48 PM, 22 May
ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது. ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா மரணங்கள் 3,100 ஆக உயர்வு.
READ MORE

Coronavirus Live News Updates Highlights in Tamil on May 24

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
In the wake of Coronavirus outbreak and following the two new positive cases of the virus, Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday called an urgent meeting with Health Minister Satyendar Jain and other top officials at 3 pm on the government's preparations to deal with coronavirus. Here is the live updates.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more