• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

Coronavirus in India LIVE: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா

|

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்குப் பின்னர் இன்று காலை முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியது. டெல்லி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவை தொடங்கி இருக்கிறது.

Newest First Oldest First
11:09 AM, 25 May
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி
10:11 AM, 25 May
மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை. லாக்டவுன் வரும் 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில கூட்டம் நடக்க உள்ளது.
10:06 AM, 25 May
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியீடு. சென்னையில் ஐந்து மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு. ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது.
10:05 AM, 25 May
புதுவையில் மதுபான கடைகள் 2 மாதங்களுக்குப் பின் திறப்பு. புதுவையில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் கடைகள் திறப்பு.
9:19 AM, 25 May
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை. இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் 154 பேர் பலி. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,021 ஆகவும் அதிகரிப்பு.
9:02 AM, 25 May
உ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி
8:50 AM, 25 May
டெல்லியில் இருந்து 27 பயணிகளுடன் முதல் விமானம் சென்னை வந்தது
8:47 AM, 25 May
சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி செல்ல இருந்த விமானம் ரத்து
7:39 AM, 25 May
மகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு. மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார் அசோக் சவாண். மகாராஷ்டிராவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா ஆவாத்துக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு.
7:31 AM, 25 May
லாக்டவுனால் மகாராஷ்டிராவில் சிக்கிய 1,096 தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்தனர்
7:17 AM, 25 May
கொரோனா பாதிப்பு- ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா
6:49 AM, 25 May
2 மாதங்களுக்குப் பின் மீண்டும் இயங்கிய லக்னோ விமான நிலையம்
6:49 AM, 25 May
பயணிகள் இல்லாததால் சென்னையில் 15 விமானங்கள் ரத்து
6:25 AM, 25 May
நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது . டெல்லி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவை தொடக்கம். சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
11:46 PM, 24 May
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க அரசு அனுமதி. பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி.
7:54 PM, 24 May
தமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 0- முதல் 12 வயதுக்கு உட்பட்ட 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு. 532 ஆண் குழந்தைகளும், 416 பெண் குழந்தைகளும் இதுவரை கொரோனாவால் பாதிப்பு.
7:53 PM, 24 May
சென்னை கொத்தவால்சாவடியில் கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதி. கொத்தவால்சாவடியில் காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடைகளை திறக்கலாம்.
6:40 PM, 24 May
கேரளாவில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு
6:39 PM, 24 May
சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,576
4:59 PM, 24 May
இடம்பெயர் தொழிலாளர்களுக்காக 2,818 சிறப்பு ரயில்கள்- இன்று மட்டும் 565 சிறப்பு ரயில்கள் இயக்கம்
3:25 PM, 24 May
அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
2:32 PM, 24 May
டெல்லியில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா ; கொரோனா பாதிப்பு 13,418 ஆக அதிகரிப்பு
10:50 AM, 24 May
சென்னை மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
10:27 AM, 24 May
புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
10:15 AM, 24 May
சென்னையில் கொரோனா பாதிப்பு விவரம்
9:23 AM, 24 May
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா- 147 பேர் மரணம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,868, ஆக அதிகரிப்பு. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3867 ஆக உயர்வு
9:12 AM, 24 May
தமிழகத்தில் 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி. அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அனுமதி. 55 வயதுக்குள் மேற்பட்ட பணியாளர்கள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தல். 25 சதவீதத் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தல்
7:21 AM, 24 May
உலகளவில் கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதுவரை 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 53 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இறப்பு விகிதம் 13 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 87 சதவீதமாகவும் உள்ளது
7:20 AM, 24 May
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை தாண்டியது. பிரேசிலில் 3.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரமாக உயர்வு. ரஷ்யாவில் 3.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரஷ்யாவில் 3,388 பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.82 லட்சம் ஆகும். இத்தாலியில் 2.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
6:41 AM, 24 May
லூதியானாவிலிருந்து பீகாருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளரின் மனைவிக்கு பிரசவம். 100 கி.மீ. தூரம் நடந்தே பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளி மனைவிக்கு பிரசவம். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தை சிறிது நேரத்தில் இறந்தது
READ MORE

Coronavirus

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
In the wake of Coronavirus outbreak and following the two new positive cases of the virus, Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday called an urgent meeting with Health Minister Satyendar Jain and other top officials at 3 pm on the government's preparations to deal with coronavirus. Here is the live updates.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more