டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்: டெல்லியில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

கொரோனா முதல் அலை ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்தன. இதனால் திரையரங்குகளும் திறக்கப்பட்டன.

Coronavirus Lockdown: Delhi theatres to open with 50% from tomorrow

ஆனால் திடீரென கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகரித்தது. கொரோனா 2-வது அலையால் இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுனை அமல்படுத்தின.

கடந்த் 2 மாதங்களுக்கும் மேலாக இந்த லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன.

தமிழகத்தில் இன்னமும் திரையரங்குகள், மதுபான பார்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. இதனிடையே டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகளுடன் டெல்லியில் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்.

மேலும் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இருக்கைகளுடன் இயங்கவும் டெல்லி அரசு அனுமதி அளித்திருக்கிறது.

English summary
Delhi Govt announced fresh relaxations in Coronavirus Lockdown restrictions, Cinemas, theaters, multiplexes are allowed up to 50 per cent of the seating capacity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X